(அத்தியாயம் 6. பிரித்து ஆளும் சூழ்ச்சி)
மதிப்பிற்குரிய பாரா அவர்களுக்கு,
"நிலமெல்லாம் இரத்தம்" புத்தகத்திற்கு கொடுக்கப்பட்ட முந்தைய பதில்களை இங்குபடிக்கலாம்.
உங்களுடைய ஒவ்வொரு அத்தியாயத்தை படிக்கும் போதும், யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் பற்றி உங்கள் அடிமனதில் மறைந்திருப்பவைகள் ஒவ்வொன்றாக வெளிப்படுகின்றதை காணமுடிகின்றது. இஸ்லாமை நீங்கள் ஆதரியுங்கள் அது உங்கள் விருப்பம். ஆனால், யூத கிறிஸ்தவர்கள் பற்றி உண்மைக்கு புறம்பானவைகளை எழுதாதீர்கள்.
இப்போது "பிரித்து ஆளும் சூழ்ச்சி" என்ற ஆறாவது அத்தியாயத்தில் நீங்கள் பொறித்திருக்கும் சில மறைவான முத்துக்களை சுருக்கமாக காண்போம்.
பாரா அவர்கள் எழுதியது:
//கதையல்ல. உண்மையிலேயே இன்று உலகெங்கும் பரவி வசிக்கும் (இஸ்ரேலில் மட்டும் தொண்ணூறு சதவிகிதம்) சுமார் ஐம்பது லட்சம் யூதர்களுக்கும் அதுதான் நம்பிக்கை. அதுதான் ஞாபகார்த்தம்.//
அருமையான பாரா அவர்களே, நீங்கள் இந்த புத்தகத்தை 2004/2005ம் ஆண்டில் எழுதினீர்கள். உங்கள் வரிகளின்படி:
- 2004/2005ல் உலகத்தில் இருந்த யூதர்களின் ஜனத்தொகை சுமார்: 50 லட்சங்களாகும்.
- இஸ்ரேலில் மட்டும் 90% யூதர்கள் இருந்தார்கள், அதாவது: 45 லட்சங்களாகும்.
- இஸ்ரேல் தவிர்த்து இதர நாடுகளில் 10% யூதர்கள் இருந்தார்கள், அதாவது: 5 லட்சங்களாகும்.
உங்களிடம் கேட்கவேண்டிய கேள்விகள்:
- இந்த விவரங்களை எங்கேயிருந்து எடுத்தீர்கள்?
- எந்த நாட்டு கணக்கெடுப்பு இது?
- 2004ல் உலக யூத ஜனத்தொகை 50 லட்சங்களா?
- இஸ்ரேலில் மட்டும் 90% யூதர்கள் இருந்தார்களா?
பத்திரிக்கை துறைக்கு சம்மந்தப்பட்டவர்கள் இப்படியெல்லாம் தவறான விவரங்களை பரப்புவார்கள் என்று இதுவரைக்கும் எனக்கு தெரியாது.
உண்மையான கணக்கெடுப்பை பார்ப்போம்:
- 2004ல் உலக யூத ஜனத்தொகை: 12.99 மில்லியன்கள் (சுமார் 129 லட்சங்கள் ஆகும்). ஒரு மில்லியன் என்பது 10 லட்சம் ஆகும்.[1]
- 2005ல் உலக யூத ஜனத்தொகை: 13.03 மில்லியன்கள் (சுமார் 130 லட்சங்கள் ஆகும்).[2]
- 2005ல் இஸ்ரேலில் இருந்த யூதர்களின் எண்ணிக்கை, உலக யூத ஜனத்தொகையில் 40.2% ஆகும்[2]
- 2014ன் கணக்கெடுப்பின் படி, அமெரிக்காவில் மட்டும் இருக்கும் யூதர்களின் எண்ணிக்கை 57 இலட்சங்களை தாண்டுகிறது, அதாவது உலக யூத ஜனத்தொகையில் 40% யூதர்கள் அமெரிக்காவில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள்.[3]
- விக்கீபீடியாவின்படி அமெரிக்காவில் 53 லட்சத்திலிருந்து 68 லட்சங்கள் வரை யூதர்கள் இருக்கிறார்கள்[4].
Jewish Virtual Library தளத்தில் கீழ்கண்ட புள்ளிவிவரங்கள் தரப்பட்டுள்ளது.
உலக யூத ஜனத்தொகை (2014) கணக்கெடுப்பு:
Rank | Country | Population | % of Jewry |
---|---|---|---|
1 | Israel | 6,103,200 | 42.9% |
2 | United States | 5,700,000 | 40.1% |
கி.பி. 1880 முதல் 2014 வரை உலக யூத ஜனத்தொகை கணக்கெடுப்பு, கீழேயுள்ள பட்டியலில் தரப்பட்டுள்ளது. நாம் கவனிக்கவேண்டிய ஆண்டுகள் 2004 ஆகும் (2000 லிருந்து 2010 வரையுள்ள விவரங்கள்).
யூத ஜனத்தொகையின் கணக்கெடுப்பு (1880 லிருந்து 2014 வரை):
Year | Population |
1880 | 7,800,000 |
1900 | 10,600,000 |
1922 | 14,400,000 |
1925 | 14,800,000 |
1939 | 16,728,000 |
1945 | 11,000,000 |
1950 | 11,297,000 |
1955 | 11,800,000 |
1960 | 12,079,000 |
1970 | 12,585,000 |
1980 | 12,819,000 |
1990 | 12,868,000 |
2000 | 12,900,000 |
2010 | 13,428,300 |
2014 | 13,900,000 |
பாரா அவர்கள் கொடுத்த கணக்கையும், இதர ஜனத்தொகை கணக்கெடுப்பையும் ஒப்பிட்டால், கீழ்கண்ட வித்தியாசங்களை காணமுடியும்.
விவரம் | பாரா அவர்களின் கணக்குப்படி | இதர ஜனத்தொகை கணக்கெடுப்பு | பாரா அவர்களின் புள்ளிவிவர தவறு |
---|---|---|---|
2004/2005 உலக யூத ஜனத்தொகை | சுமார் 50 லட்சம் | சுமார் 129 லட்சம் | 79 லட்சம் |
இஸ்ரேலில் யூதர்களின் சதவிகிதம் | 90% | 40-45% | பாதிக்கு பாதி |
அமெரிக்காவில் யூத ஜனத்தொகை 2014 கணக்கெடுப்பு | இஸ்ரேல் தவிர்த்து இதர நாடுகளில் 10% யூதர்கள் இருக்கிறார்கள் (2004/2005ம் ஆண்டின் கணக்கு). | 40% | இதைப் பற்றி மூச்சு விடவில்லை |
இதுவரை நாம் கண்ட விவரங்களின் அடிப்படையில், பாரா அவர்களிடம் கீழ்கண்ட கேள்விகள் கேட்கவேண்டியுள்ளது:
1. 2004/2005ல் உலக யுத ஜனத்தொகை சுமார் 129 லட்சங்களாக இருக்கும் போது, உங்களுக்கு மட்டும் எப்படி 50 லட்சம் என்று கணக்கு வந்தது?
2. இஸ்ரேலில் மட்டும் 40%-45% யூதர்கள் இருக்கும்போது, நீங்கள் எப்படி 90% யூதர்கள் இஸ்ரேலில் இருக்கிறார்கள் என்றுச் சொல்கிறீர்கள்?
3. ஒரு பத்திரிக்கையாளராக (குமுதம் ரிப்போர்டர்) இருந்துக்கொண்டு, பொதுவாக கிடைக்கும் ஜனத்தொகை கணக்கெடுப்பையும் தப்பு தப்பாக சொல்கிறீர்களே, இதனை மக்கள் எப்படி எடுத்துக்கொள்வது? உங்களிடம் எப்படி மக்கள் சரியான விவரங்களை எதிர்ப்பார்க்கமுடியும்?
4. உங்கள் கணக்கிற்கும், இதர ஜனத்தொகை கணக்கெடுப்பிற்கும் இடையே 79 லட்சங்கள் வித்தியாசங்கள் வருகின்றதே! யாரிடமிருந்து இந்த கணக்கை வாங்கினீர்கள்? புள்ளிவிவரங்களில் ஓரிரு இலட்சம் வித்தியாசம் வந்தாலும் ஏற்கலாம், ஏனென்றால், கணக்கெடுப்பு என்று வந்துவிட்டால், 100% சரியாக இருக்காது, சில ஆயிரங்களில் வித்தியாசங்கள் வரலாம். ஆனால், 79 லட்சங்கள் வித்தியாசம் வராது. இது மக்களை முட்டாள்களாக்கும் மிகப்பெரிய ஏமாற்று வேலையாகும். ஒரு கொசுவை விழுங்கலாம், ஆனால், ஒட்டகத்தை விழுங்க முயலக்கூடாது. நீங்கள் முழு ஒட்டகத்தை விழுங்க முயன்றுள்ளீர்கள்.
5. உலக யூதர்களில் இஸ்ரேலில் மட்டும் 90% யூதர்கள் இருந்தார்களா? மீதமுள்ள 10% யூதர்கள் மட்டுமே உலகில் இதர நாடுகளில் வாழ்கிறார்களா? இப்படி மாற்றிச் சொல்வதினால், உங்களுக்கு என்ன நன்மை கிடைத்துவிட்டது?
6. நான் என்ன செய்வது? முஸ்லிம்கள் எனக்கு புத்தகங்களை கொடுத்து உதவினார்கள், அவைகளிலிருந்து எடுத்து நான் எழுதினேன் என்று சொல்லப்போகிறீர்களா?
7. ஒரு ஜனத்தின் கணக்கெடுப்பில் இப்படிப்பட்ட தில்லுமுல்லு செய்யும் உங்களிடம் எப்படி நடுநிலையான கருத்துக்கள், விமர்சனங்களை மக்கள் எதிர்ப்பார்க்க முடியும்?
மேற்கண்ட கணக்கெடுப்பை கொடுக்கும் தளங்களின் பெயர்களை நான் அடிக்குறிப்பில் கொடுத்துள்ளேன், வாசகர்கள் படித்து சரி பார்த்துக் கொள்ளலாம்.
முடிவுரை:
ஒரு ஜனத்தொகை கணக்கை சரியாக சொல்லத்தெரியாதவர்கள் எப்படி பத்திரிக்கைத்துறையில் வேலை செய்கிறார்கள்? ஆச்சரியமாக இருக்கிறது! யூத ஜனத்தொகை கணக்கை அப்படியே உல்டா செய்து, உங்கள் தொடர்களை படிக்கும் குமுதம் ரிப்போர்டர் வாசகர்களை ஏமாற்றியுள்ளீர்கள்.
அடுத்த பகுதியில் இன்னும் அனேக விவரங்களோடு சந்திக்கிறேன்.
அடிக்குறிப்புக்கள்:
[1] http://www.jstor.org/stable/23604857?seq=1#page_scan_tab_contents
[2] http://www.ajcarchives.org/AJC_DATA/Files/2005_4_WJP.pdf
[3] http://www.jewishvirtuallibrary.org/jsource/Judaism/jewpop.html
[4] https://en.wikipedia.org/wiki/Jewish_population_by_country
No comments:
Post a Comment