[16] நிலமெல்லாம் இரத்தம் – புராணக்கதையின் குகைவாசிகளும் அல்லாஹ்வும்

(நிலமெல்லாம் இரத்தத்திற்கு கொடுத்த முந்தைய பதில்களை இங்கு படிக்கவும்)

மதிப்பிற்குரிய பாரா அவர்களுக்கு,

உங்களுடைய நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தின் 15 மற்றும் 16வது அத்தியாயத்தில், முஹம்மதுவின் நபித்துவத்தை சோதிப்பதற்காக குறைஷிகள் கேட்ட மூன்று கேள்விகள் பற்றி எழுதியுள்ளீர்கள்.  அவைகள் பற்றிய அறிமுகத்தை என் முந்தைய இரண்டு கட்டுரைகளில் (14, 15) எழுதியிருந்தேன்.  

இந்த கட்டுரையில், அல்லாஹ் கொடுத்த பதில்கள் எப்படி குர்-ஆனின் நம்பகத்தன்மையை கெடுத்துப்போடுகின்றது என்பதை சுருக்கமாக காண்போம். 

முதல் கேள்வி பற்றி பாரா அவர்கள் எழுதியது:

ஆதிகாலத்தில் தமது சமூகத்தினரை விட்டுத் தனியே பிரிந்துபோன இளைஞர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? . . .மேலோட்டமாகப் பார்த்தால் முதல் இரு வினாக்களும் வெறும் சொற்களால் இட்டு நிரப்பப்பட்டவை போலத் தெரிகிறதல்லவா? உள்ளர்த்தங்கள் ஏதுமின்றி, வெறுமனே வம்புக்குக் கேட்கப்பட்டதுபோல! உண்மையில் யூத மதகுருமார்களுக்கு வம்பு நோக்கம் ஏதுமில்லை. அர்த்தங்கள் பொருந்திய இந்த வினாக்களுக்கான விடைகளை அவர்கள் நிச்சயம் அறிவார்கள். 

. . . 

அதன்பிறகு யூத ரபிக்கள் எழுப்பிய மூன்று வினாக்களுக்கும் விடைகள் வெளிவந்தன.முதலாவது, தமது சமூகத்தினரை விட்டுத் தனியே பிரிந்துபோன இளைஞர்களின் கதை. மத்திய ஆசியாவின் பிரசித்திபெற்ற புராணக் கதைகளுள் ஒன்று இது.அவர்கள் "இபேஸஸ் நித்திரையாளர்கள்" என்று அழைக்கப்பட்டவர்கள். கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள். அந்தக் காலத்திலேயே உருவமற்ற ஒரே பரம்பொருளை வணங்கிவந்த அந்த இளைஞர்களுக்கு, அவர்களது சமூகத்தினராலேயே பெரும் பிரச்னை உண்டானது. உலகமே சிலை வழிபாட்டில் மூழ்கியிருக்க, இவர்கள் மட்டும் ஒரே இறைவன், உருவமற்ற இறைவன் என்று சொல்வதைப் பொறுக்காத மக்கள், அவர்களுக்குப் பல சங்கடங்களை விளைவிக்கத் தொடங்கினார்கள்.ஆகவே, தமது மக்களை விட்டு விலகி அவர்கள் ஒரு மலைக் குகைக்குள் சென்று வசிக்கத் தொடங்கினார்கள். (மொத்தம் எத்தனைபேர் என்று தெரியவில்லை.) அவர்களை அஸ்ஹாபுல்கஹ்ஃப் (குகைத் தோழர்கள் என்று அர்த்தம்) என்று அழைப்பார்கள். குகைக்குள்ளே போனவர்கள், தம்மை மறந்து உறங்கவும் ஆரம்பித்தார்கள். (குகைக்குள் சென்றவர்களை இறைவனே காதுகளைத் தட்டிக்கொடுத்து உறங்கச் செய்ததாக குர்ஆன் கூறுகிறது. ஆதாரம்: அல் கஹ்ஃப் 18:11) சுமார் முந்நூறு வருட உறக்கம்! பிறகு அவர்களது கண்விழிப்பை, அறியாமையில் மூழ்கிக் கிடந்த மக்களின் விழிப்புணர்வுக்கு உருவகமாக வைத்து நிறைவடையும் கதை அது.

பாராவின் படி குர்-ஆனில் புராணக்கதை (கட்டுக்கதை) உள்ளது:

பாரா அவர்களே, உங்களின் கீழ்கண்ட வரிகள் என் வேலையை சுலபமாக்கிவிட்டது:

  • யூதர்கள் கேட்ட அந்த வினாக்களுக்கு விடை அவர்களுக்கு தெரிந்திருந்தது.
  • மத்திய ஆசியாவின் பிரசித்திபெற்ற புராணக் கதைகளுள் ஒன்று இது.
  • அவர்கள் "இபேஸஸ் நித்திரையாளர்கள்" என்று அழைக்கப்பட்டவர்கள். கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள்.
  • துன்புறுத்தல்களுக்கு பயந்து குகையில் பதுங்கியவர்கள் 300 ஆண்டுகளுக்கு மேல் தூங்கினார்கள்.

நீங்கள் இந்த கதை ஒரு புராணக்கதை என்று சுட்டிக்காட்டியுள்ளீர்கள். ஒரு கட்டுக்கதையை உண்மையான சரித்திர நிகழ்ச்சியாக குர்-ஆன் சொல்லியுள்ளதை மறைமுகமாக நீங்கள் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். இதிலிருந்து குர்-ஆன் ஒரு இறைவேதமல்ல என்பதை சொல்லிவிட்டீர்கள். 

குர்-ஆனில் காணப்படும் அனேக கட்டுக்கதைகளில் 'இந்த குகைவாசிகள்' பற்றிய கதையும் ஒன்று. 

இந்த நிகழ்ச்சிப் பற்றி குர்-ஆன் 18:9-22, 25-26ல் சொல்லப்பட்டுள்ளது.  இந்த வசனங்களை அடிக்குறிப்பு [1]ல் கொடுத்துள்ளேன். இப்போது இந்த கதை குர்-ஆனில் இருப்பதினால் அல்லாஹ்விற்கு உண்டாகும் பிரச்சனைகள் என்னவென்பதை சுருக்கமாக காண்போம்:

1) குகையில் ஒதுங்கியவர்கள் எத்தனைப் பேர் என்று அல்லாஹ்விற்கு தெரியவில்லை 

ஒரு கட்டுக்கதையை உண்மையான சரித்திரம் என்று அல்லாஹ்  பதிவு செய்து இருப்பது குர்-ஆனின் நம்பகத்தன்மையை சிதைக்கும் முதலாவது துப்பாகும். இரண்டாவதாக, அந்த குகையில் ஒதுங்கியவர்கள் எத்தனைப்பேர் என்று அல்லாஹ் சொல்லாமல் விட்டது, குர்-ஆன் மீதான சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.  குர்-ஆன் 18:22ம் வசனத்தில் அல்லாஹ் குழப்பும் விதத்தை பாருங்கள்:

18:22. (அவர்கள்) மூன்று பேர் தாம்; அவர்களில் நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலர்) கூறுகின்றனர், (இல்லை) அவர்கள் ஐந்து பேர் தாம்; - அவர்களில் ஆறாவது அவர்களுடைய நாய்" என்று மறைவானதை ஊகம் செய்து (சிலர்) கூறுகிறார்கள்; இன்னும் (சிலர்) "ஏழுபேர் - அவர்களில் எட்டாவது அவர்களுடைய நாய்" என்று சொல்கிறார்கள் – (நபியே!) அவர்களுடைய எண்ணிக்கையை என்னுடைய இறைவன் தான் நன்கறிவான்; சிலரைத் தவிர, மற்றெவரும் அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்" என்று கூறுவீராக! ஆகவே, அவர்களைப் பற்றி வெளிரங்கமான விஷயம் தவிர (வேறெது பற்றியும்) நீர் தர்க்கம் செய்ய வேண்டாம்; இன்னும் அவர்களைக் குறித்து இவர்களில் எவரிடமும் நீர் தீர்ப்புக் கேட்கவும் வேண்டாம்.

அந்த குகையில் ஒதுங்கியவர்கள் எத்தனைப் பேர்? என்ற கேள்விக்கு அல்லாஹ் தரும் பதில் இது தான் (இது பதிலா!?). சிலர் மூன்று பேர் என்றுச் சொல்கிறார்களாம், சிலர் ஐந்து பேர் என்றுச் சொல்கிறார்களாம், வேறு சிலர் ஏழு பேர் என்றுச் சொல்கிறார்களாம். கடைசி வரையிலும், எத்தனைப்பேர் என்று அல்லாஹ் கூட சொல்லவே இல்லை!

இதனை, பாரா அவர்கள் சரியாக சுட்டிக்காட்டினார், அதாவது இந்த கதை ஒரு புராணக்கதையாகும் அதாவது கட்டுக்கதையாகும். வாய்வழியாக கதைகள் உலாவும் போது, இப்படி ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறான எண்ணிக்கைத் தான் வெளிப்படும்.  

அல்லாஹ் இந்த கதையை சரித்திரக்கதை என்றுச் சொல்வதாக இருந்தால், ஏன் அவர் எண்ணிக்கையை சரியாகச் சொல்லவில்லை? மேலும், அந்த வசனத்தில் அல்லாஹ்வோடு சேர்த்து, இன்னும் சிலருக்குத் தான் அந்த எண்ணிக்கைத் தெரியும் என்று அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான். ஆனால், அது என்ன எண்ணிக்கை என்று சொல்ல மறுத்துவிட்டான். அல்லாஹ்வின் இந்த அரைகுறையான பதில், கேட்ட கேள்விக்கு எப்படி சரியான பதிலாக அமையும்?

//(நபியே!) அவர்களுடைய எண்ணிக்கையை என்னுடைய இறைவன் தான் நன்கறிவான்; சிலரைத் தவிர, மற்றெவரும் அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்" என்று கூறுவீராக!//

அல்லாஹ் சொன்ன இதே பதிலைத் தான், அக்கால பாமர மக்கள் கூட வாய்வழியாக கேட்டு அறிந்து வைத்திருப்பார்கள். முஹம்மதுவைப் போன்ற ஒரு வியாபாரியிடம் சென்று, 'நீ பல நாடுகளுக்குச் சென்று வியாபாரம் செய்து இருக்கிறாய். குகையில் ஒதுங்கிய அந்த வாலிபர்கள் பற்றிய கதையை நீ கேட்டு இருந்திருந்தால் அதைப் பற்றி சிறிது விளக்கமுடியுமா? என்று கேட்கும் போது, அவர் அல்லாஹ் சொன்னது போலத்தான் பதில் சொல்வார், 'சிலர் குகையில் ஒதுங்கியது 3 பேர் என்கிறார்கள், சிலர் 5 அல்லது 7 என்று சொல்பவர்கள் உண்டு, ஆனால், உண்மையான எண்ணிக்கை எனக்குத் தெரியாது என்றுச் சொல்வார்'.  

இப்படிப்பட்ட அரைகுறை பதிலைச் சொன்ன அல்லாஹ் எப்படி சர்வ ஞானியாக இருக்கமுடியும்?

ஏதோ தவறான எண்ணிக்கையைச் சொல்லி ஏன் வீணாக மாட்டிக்கொள்ளவேண்டும்? எனவே, சிலர் இப்படிச் சொல்கிறார்கள்! சிலர் அப்படிச் சொல்கிறார்கள்! என்று சொல்லிவிட்டு எண்ணிக்கையைச் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டால்  தப்பித்துக்கொள்ளலாம் என்ற தோரணையில் பதிலை கொடுத்துள்ளார் அல்லாஹ்.  இந்த தவறை சரியாக புரிந்துக்கொண்ட பாரா அவர்கள் கூட, கழுவுற மீனில் நழுவுற மீன் போல, நாஜூக்காக அடைப்பிற்குள் அல்லாஹ்வின் மானத்தை காப்பாற்ற முயன்றுள்ளார். பாரா அவர்களின் அந்த வரிகளை கீழே படியுங்கள்: 

// ஆகவே, தமது மக்களை விட்டு விலகி அவர்கள் ஒரு மலைக் குகைக்குள் சென்று வசிக்கத் தொடங்கினார்கள். (மொத்தம் எத்தனைபேர் என்று தெரியவில்லை.) அவர்களை அஸ்ஹாபுல்கஹ்ஃப் (குகைத் தோழர்கள் என்று அர்த்தம்) என்று அழைப்பார்கள்.//

அடைப்பிற்குள் "(மொத்தம் எத்தனைபேர் என்று தெரியவில்லை.)" என்று எழுதிய பாரா அவர்கள் "யாருக்கு தெரியவில்லை?" என்று தெளிவாகச் சொல்லவில்லை. பாரா அவர்களுக்கு அந்த எண்ணிக்கை தெரியாது என்று எடுத்துக்கொள்வதா? அல்லது அல்லாஹ்விற்கே அதன் பதில் தெரியவில்லை என்று எடுத்துக்கொள்வதா? 

முடிவாக, குகை தோழர்கள் பற்றிய குர்-ஆனின் விவரங்களை படிக்கும் போது, சரியான பதில் தெரியாமல் பல நாட்கள் தவித்த முஹம்மது, கடைசியாக இட்டுக்கட்டிய வசனங்கள் தான் இவைகள் என்பதை புரிந்துக்கொள்ளலாம்.   இதனை மறுப்பவர்கள், அந்த காலத்தில், வேறு யாருக்கும் தெரியாத ஒரு புதிய விவரம் இந்த வசனங்களில் என்ன இருக்கிறது? என்பதை சுட்டிக்காட்டட்டும். 

2) "இபேஸஸ் நித்திரையாளர்கள்"(Seven Sleepers of Ephesus):

குகை வாசிகள் பற்றிய விவரம், புகழ் பெற்ற புராணக்கதையாகும், முஹம்மதுவிற்கு வானத்திலிருந்து இறங்கிய அல்லாஹ்விற்கு மட்டும் தெரிந்த விவரமல்ல. பாரா அவர்களின் வரிகளை பாருங்கள்:

அ) யூதர்கள் கேட்ட அந்த வினாக்களுக்கு விடை அவர்களுக்கு (மதினா யூதர்களுக்கு) தெரிந்திருந்தது.

ஆ) மத்திய ஆசியாவின் பிரசித்திபெற்ற புராணக் கதைகளுள் ஒன்று இது.

இ) அவர்கள் "இபேஸஸ் நித்திரையாளர்கள்" என்று அழைக்கப்பட்டவர்கள். கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள்.

யூதர்கள் ஒரு "பொதுஅறிவுக்" கேள்வியைத்தான் முஹம்மதுவிடம் கேட்கச் சொல்லியுள்ளார்கள். அதுவும்,  யூதர்கள் எதிரிகளாக கருதும் கிறிஸ்தவர்கள் பற்றிய புராணக்கதையைப் பற்றி கேட்கச்சொல்லியுள்ளார்கள். இந்த கதைக்கும் யூதர்களுக்கும் எந்த ஒரு சம்மந்தமுமில்லை. முஹம்மதுவின் காலத்தில் பாமர மக்கள் முதல், படித்தவர்கள் வரை பெரும்பான்மையானவர்களின் வாய்களில் உலாவிய கதையை முஹம்மது அரைகுறையாக அறிந்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால், பாரா போன்றவர்கள் தான், ஒன்றுமில்லாதவற்றை பிடித்துக்கொண்டு, 'இந்த பதிலின் மூலமாக முஹம்மதுவின் நபித்துவம் நிரூபிக்கப்பட்டது' என்று தம் தொடர் கட்டுரையில் எழுதுகிறார்கள் (பாரா அவர்கள் என்ன செய்யமுடியும்! முஸ்லிம்கள் சொன்னதைத் தானே அவரும் எழுதமுடியும்!).

இதைப் பற்றிய பொதுவான விவரங்களை அறிய இந்த தொடுப்பை சொடுக்கவும்: https://en.wikipedia.org/wiki/Seven_Sleepers

முடிவுரை:

ஒரு கட்டுக்கதையை அல்லாஹ் குர்-ஆனில் புகுத்தியுள்ளான், மேலும் அவன் கொடுத்த பதில் கூட அரைகுறையானதாக இருக்கிறது. குகையில் பதுங்கியவர்களின் எண்ணிக்கை எனக்குத் தெரியும் என்று அல்லாஹ் சொல்கிறான், ஆனால் உண்மையான எண்ணிக்கை என்னவென்று அல்லாஹ் கடைசி வரை சொல்லவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது?  குகை  பற்றிய வசனங்கள் முஹம்மதுவின் சொந்த சரக்கு ஆகும், அவைகள் சொர்க்கத்திலிருந்து இறங்கிய சரக்கு அல்ல.   முஹம்மது இந்த பதிலை அளித்தால், நிச்சயமாக மக்கள், "தூங்கியவர்கள் எத்தனை பேர்?" என்று கேட்பார்கள், அப்போது நீ அவர்களோடு அதிகமாக தர்க்கம் செய்யவேண்டாம் என்று அல்லாஹ் முஹம்மதுவிற்கு கட்டளையிடுகின்றான்.

(நபியே!) அவர்களுடைய எண்ணிக்கையை என்னுடைய இறைவன் தான் நன்கறிவான்; சிலரைத் தவிர, மற்றெவரும் அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்" என்று கூறுவீராக! ஆகவே, அவர்களைப் பற்றி வெளிரங்கமான விஷயம் தவிர (வேறெது பற்றியும்) நீர் தர்க்கம் செய்ய வேண்டாம்; இன்னும் அவர்களைக் குறித்து இவர்களில் எவரிடமும் நீர் தீர்ப்புக் கேட்கவும் வேண்டாம்.

சர்வத்தையும் அறிந்த ஞானியாக அல்லாஹ் இருந்திருந்தால், தூங்கியவர்களின் சரியான எண்ணிக்கையை சொல்லியிருக்கலாம் அல்லவா? மற்றவர்கள் சொல்வதெல்லாம் பொய்யாகும், "நான் சொல்லும் எண்ணிக்கைத் தான் சரியானது" என்று சொல்லியிருக்கலாம். ஆனால், அவன் சொல்லவில்லை, ஏனென்றால், முஹம்மதுவிற்கு சரியான எண்ணிக்கை தெரியாது, எனவே, அல்லாஹ்வினால் சொல்லமுடியவில்லை.

இந்த அரைகுறை விவரத்திற்கு சில இஸ்லாமிய அறிஞர்கள் "எண்ணிக்கை முக்கியமல்ல, அந்த கதையிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடம் தான் முக்கியம், அதற்காகத் தான் அல்லாஹ் எண்ணிக்கையைச் சொல்லவில்லை" என்று ஒரு சப்பைக் கட்டுக் கட்டுவார்கள். அல்லாஹ் இப்படி அரைகுறை விவரம் சொன்னால் அது எப்படி முழுமையான பதிலாக அமையும்?  இதிலிருந்து முஹம்மதுவின் நபித்துவம் எப்படி நிருபிக்கப்படும்?

அடுத்த கட்டுரையில், மீதமுள்ள இரண்டு பதில்களைப் பற்றி காண்போம்.

அடிக்குறிப்புக்கள்:

[1] குர்-ஆன் 18:9-22, 25-26 (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

18:9. (அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறீரோ?

18:10. அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் "எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!" என்று கூறினார்கள்.

18:11. ஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம்.

18:12. பின்பு, (அக்குகையில் தங்கியிருந்த) இருபிரிவினர்களில் எப்பிரிவினர், தாங்கள் (குகையில்) தங்கியிருந்த கால அளவை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைச் சோதிப்பதற்காக அவர்களை நாம் எழுப்பினோம்.

18:13. (நபியே!) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் - தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம்.

18:14. அவர்கள் (கொடுமைக்கார அரசன் முன்னிலையில்) எழுந்து நின்று "வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாகிய அவனே, எங்களுடைய இறைவன்; எக்காலத்தும் அவனையன்றி வேறு எவரையும் நாயனென்று அழைக்க மாட்டோம்; (அப்படிச் செய்தால் குஃப்ரில் கொண்டு சேர்க்கும்) - வரம்பு மீறியதைச் சொன்னவர்கள் ஆவோம்" என்று அவர்கள் உறுதியாகக் கூறிய நிலையில் அவர்கள் இதயங்களை நாம் வலுப்படுத்தினோம்.

18:15. எங்கள் சமூகத்தாராகிய அவர்கள் அவனையன்றி வேறு நாயனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் அவற்றின் மீது தெளிவான அத்தாட்சியைக் கொண்டு வரவேண்டாமா? ஆகவே அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக் கட்டுபவனை விட அநியாயக்காரன் யார்? (என்றும் கூறினார்கள்).

18:16. அவர்களையும், அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றையும் விட்டு விலகி நீங்கள், குகையின்பால் ஒதுங்கிக் கொள்ளுங்கள், உங்களுடைய இறைவன் தன்னுடைய ரஹ்மத்திலிருந்து உங்களுக்கு விசாலமாகக் கொடுத்து, உங்கள் காரியத்தில் உணவு பிரச்சனையை உங்களுக்கு எளிதாக்கித் தருவான் (என்று அவர்களில் ஓர் இளைஞர் சொன்னார்).

18:17. சூரியன் உதயமாகும் போது (அவர்கள் மீது படாமல்) அது அவர்களுடைய குகையின் வலப்புறம் சாய்வதையும், அது அஸ்தமிக்கும் போது அது அவர்களுடைய இடப்புறம் செல்வதையும் நீர் பார்ப்பீர்; அவர்கள் அதில் ஒரு விசாலமான இடத்தில் இருக்கின்றனர் - இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும், எவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ, அவரே நேர் வழிப்பட்டவராவார்; இன்னும், எவனை அவன் வழிகேட்டில் விடுகிறானோ, அவனுக்கு நேர் வழிகாட்டும் உதவியாளர் எவரையும் நீர் காணவே மாட்டீர்.  

18:18. மேலும், அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோதிலும், நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப்பவர்களாகவே எண்ணுவீர்; அவர்களை நாம் வலப்புறமும் இடப்புறமுமாக புரட்டுகிறோம்; தவிர, அவர்களுடைய நாய் தன் இரு முன்னங்கால்களையும் வாசற்படியில் விரித்(துப் படுத்)திருக்கிறது; அவர்களை நீர் உற்றுப்பார்த்தால், அவர்களை விட்டும் வெருண்டு ஓடிப் பின்வாங்குவீர்; அவர்களில் நின்றும் உண்டாகும் பயத்தைக் கொண்டு நிரம்பிவிடுவீர்,

18:19. இன்னும் அவர்களிடையே ஒருவரையொருவர் கேட்டுக் கொள்வதற்காக நாம் அவர்களை இவ்வாறு எழுப்பினோம்; அவர்களிலிருந்து சொல்பவர் (ஒருவர்) "நீங்கள் எவ்வளவு நேரம் (நித்திரையில்) இருந்தீர்கள்?" எனக் கேட்டார்; "ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் தங்கியிருந்தோம்" எனக் கூறினார்கள்; (மற்றவர்கள்) "நீங்கள் (நித்திரையில்) இருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கு அறிந்தவன்; ஆகவே, உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் பட்டணத்திற்கு அனுப்புங்கள்; அவர்கள் சுத்தமான ஆகாரம் எது என்பதை நன்கு கவனித்து, அதிலிருந்து ஆகாரத்தை உங்களுக்காகக் கொண்டு வரட்டும்; மேலும் அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்; உங்களைப் பற்றி எவருக்கும் அவர் அறிவித்து விட வேண்டாம் (என்றனர்).

18:20. ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் உங்களை அறிந்து கொண்டால், உங்களைக் கல்லாலடித்துக் கொன்றுவிடுவார்கள்; அல்லது தங்களுடைய மார்க்கத்தில் உங்களை மீட்டி விடுவார்கள்; அப்புறம், நீங்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டீர்கள்" (என்றும் கூறினர்).

18:21. இன்னும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும், நிச்சயமாக கியாம நாளிலும் சந்தேகமில்லை என்றும் அப்பட்டணவாசிகள் அறிந்து கொள்வதற்காகவே, இவ்வாறு அவர்களைப் பற்றிய (விஷயத்)தை வெளியாக்கினோம்; (அப்பட்டணவாசிகளோ) "இவர்கள் யார் என்பதை பற்றி தர்க்கித்துக் கொண்டதை (நபியே! நினைவு கூறும்) "இவர்கள் (இருந்த இடத்தின்) மீது ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள்; இவர்களை(ப் பற்றி) இறைவனே நன்கறிவான் என்றனர்; இ(வ்விவாதத்)தில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள்: "நிச்சயமாக அவர்கள் மீது ஒரு மஸ்ஜிதை அமைப்போம்" என்று கூறினார்கள்.

18:22. (அவர்கள்) மூன்று பேர் தாம்; அவர்களில் நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலர்) கூறுகின்றனர்(இல்லை) அவர்கள் ஐந்து பேர் தாம்; - அவர்களில் ஆறாவது அவர்களுடைய நாய்" என்று மறைவானதை ஊகம் செய்து (சிலர்) கூறுகிறார்கள்; இன்னும் (சிலர்) "ஏழுபேர் - அவர்களில் எட்டாவது அவர்களுடைய நாய்" என்று சொல்கிறார்கள் - (நபியே!) அவர்களுடைய எண்ணிக்கையை என்னுடைய இறைவன் தான் நன்கறிவான்; சிலரைத் தவிர, மற்றெவரும் அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்" என்று கூறுவீராக! ஆகவே, அவர்களைப் பற்றி வெளிரங்கமான விஷயம் தவிர (வேறெது பற்றியும்) நீர் தர்க்கம் செய்ய வேண்டாம்; இன்னும் அவர்களைக் குறித்து இவர்களில் எவரிடமும் நீர் தீர்ப்புக் கேட்கவும் வேண்டாம்.

18:25. அவர்கள் தங்கள் குகையில் முன்னூறு வருடங்களுடன் மேலும் ஒன்பது அதிகமாக்கி (முன்னூற்றி ஒன்பது வருடங்கள்) தங்கினார்கள்.

18:26. "அவர்கள் (அதில்) தரிப்பட்டிருந்த (காலத்)தை அல்லாஹ்வே நன்கறிந்தவன்; வானங்களிலும் பூமியிலும் மறைவாய் இருப்பவை அவனுக்கே உரியனவாகும்; அவற்றை அவனே நன்றாக பார்ப்பவன்; தெளிவாய்க் கேட்பவன் - அவனையன்றி அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை, அவன் தன்னுடைய அதிகாரத்தில் வேறு எவரையும் கூட்டாக்கிக் கொள்வதுமில்லை" என்று (நபியே!) நீர் கூறும்.


நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்திற்கு பதில்கள்

உமரின் இதர ரமளான் தொடர் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2016ramalan/2016_paragavan16.html


No comments:

Post a Comment

நிலமெல்லாம் இரத்தம் - ஓர் விமர்சனம்

திரு. பா. ராகவன் அவர்களின் "நிலமெல்லாம் இரத்தம்" புத்தகத்திற்கு பதில்கள் நிலமெல்லம் இரத்தம் - விமர்சனம் PDF  (7 MB) [1...