இதுவரை:
கடந்த ஆண்டு(2016) ரமளான் மாத தொடர் கட்டுரைகளுக்காக, பா ராகவன் அவர்கள் எழுதிய நிலமெல்லம் இரத்தம் புத்தகத்தை எடுத்து தூசு தட்டினேன். நான் 15வது பதிலை முடிக்கும் போது, பீஜே அவர்களின் குகைவாசிகள் என்ற விளக்கவுரைக்கு பதில் கொடுக்க நேரிட்டது, எனவே அதனை கையில் எடுத்தேன். பீஜே அவர்கள் தம்முடைய விளக்கவுரையில் சவக்கடல் பற்றி தம்முடைய தகுதிக்கும் திறமைக்கும் ஏற்காத விளக்கத்தை கொடுத்தபடியினால், அந்த சவக்கடலில் அவரையும், அவரது கண்மூடித்தனமான வாதங்களையும் கொஞ்சம் முக்கி எடுக்கலாம் என்று எண்ணி, சவக்கடல் பற்றிய ஒரு சுருக்கமான விளக்கத்தை தொகுத்து எழுதினேன். சவக்கடலில் இப்படி முக்கி எடுத்தாலாவது, அந்த அறியாமை அவரை விட்டு அகலும் என்ற ஆசையில் இப்படி செய்தேன். முக்கி எடுக்கும் படலம் முடிந்து திரும்பி பார்க்கும் போது, ரமளானும் முடிந்துவிட்டது, எனவே பாராவை கொஞ்சம் பாராமல் விட்டுவிட்டேன். 2017ம் ஆண்டின் ரமளானும் இதோ வந்துவிட்டது. இவ்வாண்டு, நிலமெல்லாம் இரத்தத்தில் பாராவை முக்கி எடுக்கலாம் என்று எண்ணி, விட்ட இடத்திலிருந்து தொடருகிறேன்.
துல்கர்னைனும் இஸ்லாமும்
முஹம்மதுவின் நபித்துவத்தை சோதிப்பதற்காக யூதர்கள் கேட்கச்சொன்ன மூன்று கேள்விகளில், முதலாவது கேள்வி பற்றி முந்தைய கட்டுரைகளில் கண்டோம். இப்போது, இரண்டாவது கேள்வி பற்றி பாரா அவர்கள் எழுதிய சில வரிகளை சுருக்கமாக கண்டு, அதன் பிறகு நம் விமர்சனத்தை முன்வைப்போம்.
பாரா அவர்கள் எழுதியது:
நிலமெல்லாம் ரத்தம் 16 - அபிசீனிய மன்னன் நஜ்ஜாஷி
"ஆதிகாலத்தில் தமது சமூகத்தினரை விட்டுத் தனியே பிரிந்துபோன இளைஞர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? கிழக்கு, மேற்கு திசையெங்கும் பயணம் செய்து இரு எல்லைகளையும் தொட்ட பயணி யார்? அவரது சிறப்பு என்ன? ஆன்மா என்பது என்ன? யூத மதகுருமார்களின் இந்த மூன்று வினாக்களுக்கு முகம்மது நபி என்ன பதில் சொன்னார் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்தக் கேள்விகளிலிருந்து உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?"
. . .
"சர்வநிச்சயமாக முகம்மதுவுக்கு விடைகள் தெரிந்திருக்காதென்று அவர்கள் நம்பியதுதான் இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம். ஏனெனில், முதல் இரு வினாக்களுமே சரித்திரம் தொடர்பானவை. முகம்மது நபியின் காலமான கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு இது சரித்திர வினா என்றால், இக்கேள்விகளின் வயதை யூகித்துப் பார்க்கலாம். ஆதிகாலத்தில் பாதிக்காலம் அது. அதற்கும் முன்னால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த சங்கதிகளை உள்ளடக்கிய வினாக்கள் அவை."
. . .
அதன்பிறகு யூத ரபிக்கள் எழுப்பிய மூன்று வினாக்களுக்கும் விடைகள் வெளிவந்தன.
. . .
யூத ரபிக்களின் இரண்டாவது வினா, கிழக்கையும் மேற்கையும் பயணத்தால் அளந்த யாத்ரீகரைப் பற்றியது. அவரது பெயர், துல்கர்னைன். (இச்சொல்லுக்கு இரண்டு கொம்புகள் உடையவர் என்று பொருள்.)
இங்கு கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், துல்கர்னைன் என்பவன் பற்றி பாரா அவர்கள் எழுதியது இரண்டு வரிகள் தான். ஆனால், குர்ஆனில் பல வசனங்கள் துல்கர்னைன் பற்றி சொல்லப்பட்டுள்ளது. குர்-ஆன் விவரித்த துல்கர்னைன் நிகழ்ச்சி ஒரு சரித்திர நிகழ்ச்சி என்று பாரா அவர்கள் கருதியது வருத்தப்படவேண்டிய விஷயம்.
துல்கர்னைன் என்பவன் யார்? அவனைப் பற்றி குர்ஆன் சொல்லும் விவரங்கள் என்ன? அவ்விவரங்களில் உள்ள சரித்திர பிழைகள் என்னவென்பதை சுருக்கமாக காண்போம். முஹம்மது சுயமாக தன் பொது அறிவை பயன்படுத்தி பதில் அளித்தார், அதனால் தான் அந்த பதிலில் சரித்திர பிழைகள் உள்ளது என்று சொல்வதற்கு இல்லை. ஏனென்றால், அந்த பதிலை கொடுத்தவன் முக்காலங்களையும் அறிந்தவன் என்று போற்றப்படும் அல்லாஹ். எனவே, கடந்த கால சரித்திர விவரங்களை அல்லாஹ் சொல்லும் போது அவைகளை குர்-ஆன் பதிக்கும் போது, அவைகளில் பிழைகள் இருக்கக்கூடாது.
துல்கர்னைன் பற்றி குர்ஆனின் வசனங்கள்:
குர்ஆன் பதினேழு வசனங்களில் (குர்ஆன் 18:83-99), துல்கர்னைன் பற்றி விவரிக்கிறது. ஆனால், பாரா அவர்கள் வெறும் இரண்டு வரிகளில் மேலோட்டமாக தொட்டுவிட்டு முடித்துவிட்டார். ஒருவேளை, குர்-ஆனின் இந்த கட்டுக்கதைப் பற்றிய முழுவிவரமும் பாரா அவர்களுக்கு தெரிந்திருக்குமோ!?!
குர்ஆனின் மேற்கண்ட பதினேழு வசனங்களை ஆய்வு செய்யும் போது, பல சரித்திர பிழைகளை குர்ஆன் செய்துள்ளதை காணமுடியும்.
குர்ஆனில் 17 வசனங்களில் துல்கர்னைன் என்பவரைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது:
குர்ஆன் 18:83-99
18:83. (நபியே!) அவர்கள் துல்கர்னைனை பற்றி உங்களிடம் வினவுகின்றனர்; "அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு நான் ஓதிக் காண்பிக்கிறேன்" என்று நீர் கூறுவீராக.
18:84. நிச்சயமாக நாம் அவருக்கு பூமியில் (தம் ஆட்சியை நிறுவ) வசதிகள் அளித்தோம்; இன்னும் ஒவ்வொரு பொருளிலிருந்தும் (தக்க பலனடையும்) வழியையும் அவருக்குக் (காண்பித்துக்) கொடுத்தோம்.
18:85. ஆகவே (அவர்) ஒரு வழியைப் பின் பற்றினார்.
18:86. சூரியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர் சென்றடைந்த போது, அது ஒரு சேறு கலந்த நீரில் (மூழ்குவதுபோல்) மறையக் கண்டார்; இன்னும் அவர் அவ்விடத்தில் ஒரு சமூகத்தினரையும் கண்டார்; "துல்கர்னைனே! நீர் இவர்களை(த் தண்டித்து) வேதனை செய்யலாம்; அல்லது அவர்களுக்கு அழகியதான நன்மை செய்யலாம்" என்று நாம் கூறினோம்.
18:87. (ஆகவே அம்மக்களிடம் அவர்) கூறினார்: "எவன் ஒருவன் அநியாயம் செய்கிறானோ அவனை நாம் வேதனை செய்வோம்." பின்னர் அ(த்தகைய)வன் தன் இறைவனிடத்தில் மீள்விக்கப்பட்டு, (இறைவனும்) அவனைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வான்.
18:88. ஆனால், எவன் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறானோ அவனுக்கு அழகான நற்கூலி இருக்கிறது; இன்னும் நம்முடைய கட்டளைகளில் இலகுவானதை அவனுக்கு நாம் கூறுவோம்.
18:89. பின்னர், அவர் (மற்றும்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.
18:90. அவர் சூரியன் உதயமாகும் (கிழக்குத்) திசையை எத்திய போது, அது ஒரு சமூகத்தாரின் மீது உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதைக் கண்டார்; அவர்களுக்கும் சூரியனுக்குமிடையே நாம் ஒரு தடுப்பையும் ஏற்படுத்தவில்லை.
18:91. (வெப்பத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளாத அவர்களுடைய நிலை) அவ்வாறுதான் இருந்தது; இன்னும் என்னென்ன அவருடன் இருந்தது என்பதை நாம் நன்கறிந்திருக்கிறோம்.
18:92. பின்னர், அவர் (வேறொரு) வழியைப் பின்பற்றிச் சென்றார்.
18:93. இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓரிடத்தை) அவர் எத்தியபோது, அவ்விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தச் சொல்லையும் விளங்கிக் கொள்பவராக இருக்கவில்லை;
18:94. அவர்கள் "துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது - குழப்பம் - செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?" என்று கேட்டார்கள்.
18:95. அதற்கவர்: "என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது; ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; நான் உங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஓர் உறுதியான தடுப்பை ஏற்படுத்தி விடுகிறேன்" என்று கூறினார்.
18:96. "நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்" (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் "உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்" (என்றார்).
18:97. எனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை.
18:98. "இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே" என்று கூறினார்.
18:99. இன்னும், அந்நாளில் அவர்களில் சிலரைச் சிலருடன் (கடல்) அலைகள் (மோதுவதைப் போல்) மோதுமாறு நாம் விட்டு விடுவோம்; பின்னர், ஸூர் (எக்காளம்) ஊதப்படும்; பிறகு நாம் அவர்களை ஒன்று சேர்ப்போம். (டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)
மேற்கண்ட வசனங்களிலிருந்து துல்கர்னைன் பற்றி அறியப்படுபவைகள்:
1) அவர் ஒரு நல்ல அல்லாஹ்வின் அடியார், அதாவது அல்லாஹ்வை தொழுதுக்கொள்ளும் முஸ்லிம்.
2) அவர் ஒரு மகா அரசன், அல்லாஹ் அவருக்கு விசாலமான ஆட்சி அதிகாரத்தை கொடுத்து இருந்தான்.
3) அவருக்கு அல்லாஹ் வெளிப்பாடுகளையும் கொடுத்திருந்தான், அதாவது முஹம்மதுவோடு பேசியது போல, இவரோடும் அல்லாஹ் பேசியுள்ளான். முஹம்மதுவிடம் ஜிப்ரீல் தூதனை அனுப்பி அல்லாஹ் பேசினான், இவரோடு நேரடியாக பேசினானோ அல்லது தூதர்களை அனுப்பி பேசினானோ தெரியாது. ஆனால், இவரோடு அல்லாஹ் பேசியதற்கு குர்ஆனே சாட்சி.
4) கடைசி காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளை முன்னறிவிப்புக்களாக (தீர்க்கதரிசனங்களாக) இவர் அல்லாஹ்வின் உதவியுடன் அறிவித்துள்ளார்.
5) மொத்தத்தில் இவர் முஹம்மதுவைப் போல ஒரு நபி.
இந்த துல்கர்னைன் யார்? மகா அலேக்சாண்டரா?
இப்படிப்பட்ட சிறப்பு குணங்களைப் பெற்ற அல்லாஹ்வின் நல்லடியாராகிய இவர் யார்? துல்கர்னைன் என்பது ஒரு பட்டப்பெயர், அது உண்மையான பெயர் அல்ல.
துல்கர்னைன் என்றுச் சொன்னால், அரபி மொழியில் "இரண்டு கொம்புகளை உடையவர் அல்லது இரண்டு கொம்புகளுக்கு சொந்தக்காரர்" என்று அர்த்தம். இவருடைய சொந்தப்பெயரையும், வாழ்ந்த காலத்தையும் குர்ஆன் குறிப்பிடாததினால், இஸ்லாமிய அறிஞர்கள் குழம்பிப்போய் இருக்கிறார்கள். ஒன்றை மட்டும் நிச்சயமாகச் சொல்லமுடியும், இவர் கி.பி. 7ம் நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்தவராக இருந்திருக்கிறார். ஏனென்றால், முஹம்மதுவின் காலத்துக்கு முன்பு வாழ்ந்த இவரின் சரித்திரத்தை ஓதிக்காண்பிப்பதாக குர்ஆன் வசனம் சொல்கிறது(18:83). பாரா அவர்கள் எழுதும் போது இவரது காலம் பற்றி தம்முடைய சிறப்பான பாணியில் 'ஆதிகாலத்தில் பாதிக்காலம் அது' என்று அழகாக குறிப்பிட்டுள்ளார்.
துல்கர்னைன் மகா அலேக்சாண்டர் தான்:
பல இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள், குர்ஆனின் விளக்கவுரைகளை எழுதிய அறிஞர்கள் 'இந்த துல்கர்னைன் என்பவர் மகா அலேக்சாண்டர்' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இப்னு இஷாக் (சீரத் ரஸூலல்லாஹ்):
இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் இப்னு இஷாக், இந்த துல்கர்னைன் என்பவர் 'எகிப்து மற்றும் கிரேக்கத்துக்கு சம்மந்தப்பட்டவன்' என்றுச் சொல்கிறார்.
A man who used to purvey stories of the foreigners, which were handed down among them, told me that Dhul-Qarnayn was an Egyptian whose name was Marzuban bin Mardhaba, the Greek. (page 139)
இப்னு இஷாம்:
சரித்திர ஆசிரியர் இப்னு இஷாம், துல்கர்னைன் என்பவர் 'மகா அலேக்சாண்டர்' என்று குறிப்பிடுகிறார்.
Dhu al-Qarnain is Alexander the Greek, the king of Persia and Greece, or the king of the east and the west, for because of this he was called Dhul-Qarnayn [meaning, 'the two-horned one']
இஸ்லாமுக்கு முன்பு எழுதப்பட்ட பாடல்களில் துல்கர்னைன்:
இஸ்லாமுக்கு முன்பு எழுதப்பட்ட கவிதைகளில் துல்கர்னைன் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதை இப்னு இஷாக் தம் சரித்திரத்தில் பதிவு செய்துள்ளார்.
Dhu'l-Qarnayn before me was a Muslim
Conquered kings thronged his court,
East and west he ruled, yet he sought
Knowledge true from a learned sage.
He saw where the sun sinks from view
In a pool of mud and fetid slime
Before him Bilqis [Queen of Sheba] my father's sister
Ruled them until the hoopoe came to her. (Page 12).
தஃப்ஸீர்கள் (குர்ஆன் விளக்கவுரைகள்)
ஜலலைன் தஃப்ஸீர்:
இஸ்லாமிய அறிஞர் ஜலலைன் தம் குர்ஆன் விளக்கவுரையில், துல்கர்னைன் என்பவர் மகா அலேக்சாண்டர் என்று விளக்கமளித்துள்ளார். ஆனால், அவர் நபி அல்ல என்றுச் சொல்கிறார்.
And they the Jews question you concerning Dhū'l-Qarnayn whose name was Alexander; he was not a prophet. Say 'I shall recite relate to you a mention an account of him' of his affair. (Soure)
அல் ராஜி (Fakhr al-Din al-Razi - 1149-1209 AD) என்ற அறிஞர் தம்முடைய அல்கபீர் என்ற தஃப்ஸீரில், துல்கர்னைன் என்பவர் அலேக்சாண்டர் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
While a survey in the history we do not find anybody other than Macedonian Alexander, therefore, the Dhul Qarnayn is the same Macedonian Alexander. (Razi, Tafsir al-Kabir, commenting on Q. 18:83–98).
அல்துல்லாஹ் யூசுஃப் அலி (1872–1953 AD) என்ற இஸ்லாமிய அறிஞர் (குர்ஆன் ஆங்கில மொழியாக்கம் செய்தவர்) கூட, துல்கர்னைன் என்பவர் அலேக்சாண்டர் என்றே அடையாளப்படுத்துகிறார் ( The Holy Quran, Translation and Commentary by Yusuf Ali, Appendix 7, page 763 (1983)).
துல்கர்னைன் என்பவன் மகா அலேக்சாண்டர் இல்லை என்றுச் சொல்பவர்கள், இப்பெயரின் பொருள் என்னவென்பதை பார்க்க தவறுகிறார்கள். துல்கர்னைன் என்றால், 'இரண்டு கொம்புகளை உடையவன்' என்று பொருள். இதே பெயர் மகா அலேக்சாண்டருக்கும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலே, அலேக்சாண்டரின் பெயரில், அவரது முகம் பதித்த வெள்ளி நாணயம் வெளியிடப்பட்டது, அதில் அலேக்சாண்டர் கொம்புகளை (ஆட்டைப்போல) உடையவராக காணப்படுகிறார். [1]
யூத சரித்திர ஆசிரியர், ஜோசபஸ் (கி.பி. 30 லிருந்து கி.பி. 100), தம்முடைய சரித்திரத்தில் அலேக்சாண்டர், ஜெருசலேமை பிடிக்க வந்தது பற்றி குறிப்பிட்டுள்ளார். [1]
அலேக்சாண்டர் ஜெருசலேமில் வந்த போது, யூத பிரதான ஆசாரியன், தானியேல் 8:3-8ல் தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்ட வசனங்களை எடுத்துக்காட்டி, அங்கு குறிப்பிடப்பட்டுள்ள "இரண்டு கொம்புகளுள்ள ஒரு ஆட்டுக்கடா" என்பது கிரேக்க அரசனாகிய உம்மை குறிக்கும் என்றுச் சொன்னாராம். அவ்வசனங்களின் படி, பெர்சிய அரசனை வெல்லும் அந்த கிரேக்க அரசன் நீர் தான் என்று எடுத்துக்காட்டினாராம். அதனைக் கண்டு, ஜெருசலேமை பிடிக்காமல் அலேக்சாண்டர் சென்றுவிட்டாராம்.
இது மட்டுமல்ல, இஸ்லாமுக்கு முன்பு, பல கட்டுக்கதைகள் அலேக்சாண்டர் பற்றி கிறிஸ்தவ வட்டாரங்களில் உலாவிக்கொண்டு இருந்தன. அவைகளில், இரண்டு கொம்புகள் பற்றிய விவரமும், அவர் அலேக்சாண்டர் என்றும் சொல்லப்பட்டுள்ளது [1].
இப்படி பலவிதங்களில், இரண்டு கொம்புகளை உடையவன் (துல்கர்னைன்) என்பவன் அலேக்சாண்டர் தான் என்று பரவலாக அறியப்பட்ட விவரமாக இருந்துள்ளது.
முடிவுரை:
இதுவரை பார்த்த விவரங்களின் படி, துல்கர்னைன் என்பவர் யார் என்று அல்லாஹ் குறிப்பிடாதபடியினால், இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் புத்திக்கு எட்டிய அளவிற்கு ஆய்வு செய்து, அவர் அலேக்சாண்டர் என்று சொல்லியுள்ளார்கள். துல்கர்னைனுக்கும், மகா அலேக்சாண்டருக்கும் இடையே பல ஒற்றுமைகள் காணப்படுவதினால், இந்த முடிவிற்கு வந்துள்ளார்கள். வேறு சில முஸ்லிம்கள், அவர் அலேக்சாண்டர் அல்ல, அவர் சைரஸ் என்ற அரசர் என்றுச் சொல்கிறார்கள். இதைப் பற்றி இன்னொரு கட்டுரையில் காண்போம்.
அலேக்சாண்டரையும் ஏற்கமாட்டோம், சைரஸையும் ஏற்கமாட்டோம் என்று முஸ்லிம்கள் சொல்ல முடியாது. ஏனென்றால், துல்கர்னைன் பற்றி குர்ஆனில் அது ஒரு சரித்திர நிகழ்ச்சி என்று சொல்லப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல, அந்த காலத்தில் பெரும் நிலப்பரப்பை கைப்பற்றி ஆட்சி செய்தவர் என்றுச் சொல்லும் போது, சரித்திரத்தில் அவரைப் பற்றிய விவரங்கள் எழுதப்பட்டு இருந்திருக்கவேண்டும். ஆக, குர்ஆன் சொல்லும் துல்கர்னைன் என்பவர் ஒரு நிஜ சரித்திர நபராக இருக்கவேண்டும். ஆகையால், முஸ்லிம் அறிஞர்கள் கூட்டி கழித்து பார்க்கும் போது, பொதுவாக அலேக்சாண்டர் தான் அவர் என்ற முடிவிற்கு வந்துள்ளார்கள்.
பாரா அவர்களுக்கு:
நீங்கள் நிலமெல்லாம் இரத்தம் என்ற புத்தகத்தில் பாலஸ்தீன-இஸ்ரேல் சண்டைகள் பற்றி எழுத விரும்பியிருந்தால், அவைகள் பற்றிய தற்கால நிகழ்வுகளை எழுதியிருக்கவேண்டும். அதை விட்டுவிட்டு, முஹம்மது ஒரு நபி என்று நீங்களே ஒப்புக்கொண்டது போல எழுதியது, உங்களுக்கே தலைவலியாக மாறுகிறது.
- முஹம்மது ஒரு நபி என்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?
- அப்படி ஒப்புக்கொண்டால், எப்போது நீங்கள் முஸ்லிமாக மாறப்போகிறீர்கள்?
கிறிஸ்தவத்திலே ஞானஸ்நானம் (ஞானம் வந்த பிறகு ஸ்நானம் எடுப்பது) இருப்பது போல, இஸ்லாமிலே ஸ்நானம் இல்லை (ஞானமும் இல்லை). ஆனால், ஆண்களுக்கு மட்டும் ஒரு சடங்கு உண்டு, அதாவது விருத்தசேதனம் என்று சொல்லக்கூடிய கத்னா உண்டு. நீங்கள் எப்போது கத்னா செய்துக்கொள்ளப்போகிறீர்கள்? இப்படி நான் எழுதுகிறேன் என்று கோபம் கொள்ளாதீர்கள், முஸ்லிம்களைப் பற்றி உங்களுக்கு அவ்வளவாக தெரியவில்லை. நீங்கள் இப்படிப்பட்ட புத்தகம் எழுதியிருப்பதினால், இன்றிலிருந்து பல ஆண்டுகள் கழித்து, (50 ஆண்டுகள் என்று வைத்துக்கொள்வோமே, இன்றுள்ள நம் வயதை கணக்கில் கொண்டால், நான் இருவரும் இருக்கமாட்டோம்), சில முஸ்லிம்கள் "பா ராகவன் அவர்கள் முஸ்லிமாக மாறியிருந்தார், அவர் எப்படிப்பட்ட புத்தகம் எழுதினார் என்று பாருங்கள் என்று நிச்சயம் சொல்வார்கள்". எனவே, அவர்கள் நம்பிக்கையை நாம் ஏன் கெடுக்கவேண்டும்? அதற்காகத் தான் கேட்டேன், மற்றபடி எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை.
இந்த தொடரின் அடுத்த பாகத்தில், அலேக்சாண்டர் ஒரு முஸ்லிமா? அல்லது நபியா? என்பதை ஆய்வு செய்வோம்.
அடிக்குறிப்புக்கள்
No comments:
Post a Comment