துர்கர்னைன் மற்றும் அலேக்சாண்டர் பற்றிய முந்தைய கட்டுரைகளை படிக்க இங்குசொடுக்கவும்.
குர்-ஆனின் 18வது அத்தியாயத்தின் துல்கர்னைன் வசனங்களை(18:83-99) நாம் இதுவரை ஆய்வு செய்துக்கொண்டு இருக்கிறோம். இவ்வசனங்களுக்கு முன்பு இன்னொரு கதையை அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான். அதாவது குர்-ஆனின் 18:60-82 வரையிலான வசனங்களில் மூஸா நபி, ஹில்று(கிள்று) என்பவரிடம் பாடம் கற்றுக்கொண்ட நிகழ்ச்சியை அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான்.
இந்த கதைக்கு என்ன வந்தது? இதில் என்ன பிரச்சனை? என்று பார்த்தால், இந்த விவரமும் இஸ்லாமுக்கு முன்பு பல நூல்களில் இருந்தவைகள் தாம். அவைகளை அப்படியே கொஞ்சம் மாற்றி குர்-ஆனில் அல்லாஹ்வின் வசனங்களாக, உண்மை சரித்திரங்களாக பதிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுரையை கீழ்கண்ட தலைப்புக்களில் ஆய்வு செய்வோம்:
1) குர்-ஆன் 18:60-82 வசனங்களின் சுருக்கம்
2) பீஜே அவர்களின் விளக்கம் - 273. மெஞ்ஞானமும் அஞ்ஞானமும்
3) மூஸாவும் காணாமல் போன மீனும், அலேக்சாண்டரும் ஜீவத்தண்ணீரும்
4) மூஸாவும் ஹில்றுவும், எலியாவும் ஜோஸுவா பென் லேவியும்
5) முடிவுரை
1. குர்-ஆன் 18:60-82 வசனங்களின் சுருக்கம்
இக்கட்டுரையின் அடிக்குறிப்பு [1]ல் இவ்வசனங்களை பதித்துள்ளேன், அவைகளை ஒரு முறை படித்துக்கொள்ளுங்கள். இவ்வசனங்களின் சுருக்கம் இது தான்:
கதை 1 - வசனங்கள் 18:60-64
மூஸாவும், அவரது பணியாளரும் உணவுக்காக ஒரு மீனை வைத்துக்கொண்டு நீண்ட பயணம் செய்தார்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில், அந்த மீன் எப்படியோ தப்பித்துக் கொண்டு கடலில் நீந்திச் சென்றுவிட்டது. பணியாளனிடம் காலை ஆகாரத்துக்கு அந்த மீனை கொண்டுவா! என்று சொன்னபோது, பணியாளர் மீன் தப்பித்துவிட்டது என்று கூறுகின்றார். நான் தேடி வந்த இடம் இது தான் என்று மூஸா கூறுகிறார்.
கதை 2 - வசனங்கள் 18:65-82
அந்த மீன் தொலைந்த இடத்தில் மூஸா "ஹில்று" என்ற ஒரு அல்லாஹ்வின் அடியாரை சந்திக்கிறார், அவரோடு கூட இருக்க அனுமதி கேட்கிறார். ஹில்று மூஸாவிடம் நீ என்னோடு பொறுமையாக இருக்கமுடியாது. நான் உனக்கு விவரிக்கும் வரைக்கும், என்னுடைய எந்த செயலைப் பற்றியும் நீ கேள்வி கேட்கமாட்டாய் என்று உறுதி அளித்தால், என்னோடு வரலாம் என்று கூற, மூஸாவும் ஒப்புக்கொள்கிறார். ஹில்று மூன்று செயல்களைச் செய்கிறார், அம்மூன்று செயல்களின் பின்னணியை புரிந்துக்கொள்ளாமல், மூஸா மூன்று முறையும் ஹில்றுவிடம் கேள்வி கேட்கிறார். கடைசியாக, ஹில்று மூஸாவிற்கு அவரது செயல்களின் விளக்கத்தை தெரிவிக்கிறார்.
இது தான் குர்-ஆன் 18:62-82 வரையுள்ள வசனங்களில் வரும் இரண்டு கதைகளின் சுருக்கம்.
2. பீஜே அவர்களின் விளக்கம் - 273. மெஞ்ஞானமும் அஞ்ஞானமும்
மேற்கண்ட குர்-ஆன் வசனங்களுக்கு பீஜே அவர்கள் தம்முடைய குர்-ஆன் தமிழாக்கத்தில் விளக்கம்(எண் 273) அளித்துள்ளார். மேலும் இவ்வசனங்களின் பின்னணியைச் சொல்லும் கீழ்கண்ட ஹதீஸ்களையும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் பின்னணியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர்.
மூஸா நபியவர்கள் இஸ்ரவேலர்கள் மத்தியில் உரை நிகழ்த்துவதற்காக எழுந்தார்கள். "மனிதர்களில் மிகவும் அறிந்தவர் யார்?'' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. "இதுபற்றி அல்லாஹ்வே நன்கறிந்தவன்'' எனக் கூறாமல், "நானே மிக அறிந்தவன்'' எனக் கூறி விட்டார்கள். இதனால் அல்லாஹ் அவர்கள் மீது கோபமடைந்தான். "இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் எனது அடியார் ஒருவர் இருக்கிறார். அவர் உம்மை விட அதிகம் அறிந்தவர்'' என்று அல்லாஹ் அறிவித்தான். அதற்கு மூஸா நபியவர்கள், "அவரை நான் எப்படி அடைவது?'' என்று கேட்டார்கள். "ஒரு பாத்திரத்தில் ஒரு மீனைப் போட்டுக் கொள்! அந்த மீனை எங்கே தவற விடுகிறாயோ அந்த இடத்தில் தான் அவர் இருக்கிறார்'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டது.
மூஸா நபியவர்களும், (அவர்களின் உதவியாளர்) யூஷஃ பின் நூன் அவர்களும் பாத்திரத்தில் மீனை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். ஒரு பாறையைக் கண்டு அங்கே தலைசாய்த்து தூங்கி விட்டார்கள். அந்த நேரத்தில் பாத்திரத்திலிருந்த மீன் நழுவி கடலில் சென்று விட்டது.
......இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர். (புகாரீ 122, 3401, 4725, 4726)
3. மூஸாவும் காணாமல் போன மீனும், அலேக்சாண்டரும் ஜீவத்தண்ணீரும்
அலேக்சாண்டர் ரொமான்ஸ் என்ற கட்டுக்கதை புத்தகங்களில் 'இஸ்லாமில் வரும் மூஸாவும் மீனும்' என்ற கதைப்போன்ற ஒரு கதை வருகிறது. அந்த கட்டுக்கதையில் அலேக்சாண்டர் 'ஜீவத்தண்ணீரை' தேடிச்சென்ற கதை வருகிறது. அந்த தண்ணீரை குடிப்பவர் மரிக்கமாட்டாராம். அந்த இடத்தை எப்படி அறிந்துக்கொள்வது என்று கேட்க, ஒரு ஞானி அவருக்கு, ஒரு மரித்த மீனை கொண்டு போய், ஒவ்வொரு ஊற்றிலும் கழுவு, எந்த ஊற்றில் கழுவும் போது, அது உயிர்பெருகின்றதோ, அந்த ஊற்று தான் 'ஜீவத்தண்ணீர் உள்ள ஊற்று' என்று அவருக்கு சொல்கிறார்.
One similarity between the Quran story and the Alexander romance concerns the fish that miraculously comes to life. This motif is found in the Syriac sermon by Jacob of Serugh, where Alexander travels in search of the Water of Life (Fountain of Youth). A shorter version of the story in also found in the Greek β-recension of the Alexander romance. In the Syriac legend, Alexander finds a wise man who tells Alexander to take a salted fish and wash it in the fountains in the Land of Darkness, and if the fish comes to life then he will have found the Water of Life:
The king [Alexander] said, "I have heard that therein [in the Land of Darkness] is the fountain of life, And I desire greatly to go forth and see if, of a truth, it is [there]. The old man said, ... "Command thy cook take with him a salt fish, and wherever he sees a fountain of water let him wash the fish; And if it be that it comes to life in his hands when he washes it, That is the fountain of the water of life which thou askest for, O King."
குர்-ஆன் ஆக்கியோன் இந்த கதையை அறிந்திருக்கிறார், எனவே மூஸா, ஹில்றுவை தேடிச்சென்றபோது, எப்படி அந்த இடத்தை அடையாளம் கண்டுபிடிப்பது என்று கேட்கும் போது, மேற்கண்ட மீன் கதை போன்ற ஒரு மீன் கதையை சொல்லியுள்ளார்.
4. மூஸாவும் ஹில்றுவும், எலியாவும் ஜோஸுவா பென் லேவியும்
யூதர்கள் தல்முத் என்ற நூல்களை எழுதினார்கள். அதோடு கூட பல கட்டுக்கதைகள் யூத வட்டாரங்களில் இஸ்லாமுக்கு முன்பு உலாவிக்கொண்டு இருந்தன.
ஜோஸுவா பென் லேவி (Joshua ben Levi) என்பவர் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு சம்மந்தப்பட்ட யூத ரபி ஆவார். இவரது காலத்துக்கு பின்பு, இவர் பெயரில் பல கட்டுக்கதைகள் வந்தன. இவர் எலியாவின் தோழராக அவரோடு கூட சென்றவராக கதைகள் எழுதப்பட்டன. அப்படிப்பட்ட ஒரு கதை தான் இப்போது நாம் பார்க்கப்போகிறோம். அந்த கதையை அப்படியே அல்லாஹ் உல்டா செய்து, குர்-ஆனிலும் புகுத்திவிட்டான்.
Rabbi Joshua ben Levi
References to Elijah in Jewish folklore range from short observations (e. g. It is said that when dogs are happy for no reason, it is because Elijah is in the neighborhood)[62] to lengthy parables on the nature of God's justice.
One such story is that of Rabbi Joshua ben Levi. The rabbi, a friend of Elijah's, was asked what favor he might wish. The rabbi answered only that he be able to join Elijah in his wanderings. Elijah granted his wish only if he refrained from asking any questions about any of the prophet's actions. He agreed and they began their journey. The first place they came to was the house of an elderly couple who were so poor they had only one old cow. The old couple gave of their hospitality as best they could. The next morning, as the travelers left, Elijah prayed that the old cow would die and it did. The second place they came to was the home of a wealthy man. He had no patience for his visitors and chased them away with the admonition that they should get jobs and not beg from honest people. As they were leaving, they passed the man's wall and saw that it was crumbling. Elijah prayed that the wall be repaired and it was so. Next, they came to a wealthy synagogue. They were allowed to spend the night with only the smallest of provisions. When they left, Elijah prayed that every member of the synagogue might become a leader.
Finally, they came to a very poor synagogue. Here they were treated with great courtesy and hospitality. When they left, Elijah prayed that God might give them a single wise leader. At this Rabbi Joshua could no longer hold back. He demanded of Elijah an explanation of his actions. At the house of the old couple, Elijah knew that the Angel of Death was coming for the old woman. So he prayed that God might have the angel take the cow instead. At the house of the wealthy man, there was a great treasure hidden in the crumbling wall. Elijah prayed that the wall be restored thus keeping the treasure away from the miser. The story ends with a moral: A synagogue with many leaders will be ruined by many arguments. A town with a single wise leader will be guided to success and prosperity. "Know then, that if thou seest an evil-doer prosper, it is not always unto his advantage, and if a righteous man suffers need and distress, think not God is unjust."[63]
Source - en.wikipedia.org/wiki/Elijah
இந்த கட்டுக்கதையின் சுருக்கம் இது தான், வாசகர்கள் கூர்ந்து படிக்கவும்.
1) எலியாவோடு தானும் வருவதாக ஜோஸுவா பென் லேவி அனுமதி கேட்டார்.
2) தான் எது செய்தாலும், கேள்வி கேட்காமல் வந்தால், அனுமதி கொடுப்பேன் என்று எலியா சொல்ல, ஜோஸுவா ஒப்புக்கொண்டார்.
3) நிகழ்ச்சி 1: இவ்விருவரும் ஒரு வயது முதிர்ந்த தம்பதியினரிடம் வந்து தங்குகிறார்கள். அவ்வேழை தம்பதியினர் இவர்களை நல்ல விதமாக உபசரிக்கிறார்கள். மறுநாள் கிளம்பும் போது, அந்த தம்பதியினருக்கு இருந்த ஒரு கிழட்டு மாடு சாகும்படி எலியா ஜெபம் செய்கிறார், அது அப்படியே செத்துவிடுகிறது. இது ஜோஸுவாவிற்கு பிடிக்கவில்லை. நம்மை நன்றாக கவனித்துக்கொண்ட இந்த ஏழை குடும்பத்திற்கு எலியா அநியாயம் செய்துவிட்டதாக ஜோஸுவா கோபம் கொள்கிறார்.
4) நிகழ்ச்சி 2: அடுத்ததாக, இவ்விருவர் ஒரு செல்வந்தர் வீட்டுக்கு வருகிறார்கள். நீங்கள் உழைத்து சாப்பிடுங்கள் என்றுச் சொல்லி, அவர் இவர்களை உபசரிக்காமல் துரத்துகிறார். இவ்விருவர் அங்கிருந்து கிளம்பும்போது, அந்த மனிதனுக்கு சொந்தமான ஒரு சுவர் விழும்நிலையில் இருந்ததை பார்த்து, எலியா உடனே அதை சரி செய்துவிடுகிறார். இந்த முறையும் ஜோஸுவாவிற்கு கோபம் வருகிறது.
5) நிகழ்ச்சி 3: அடுத்தபடியாக இவ்விருவரும் செழிப்பாக உள்ள ஒரு யூத தேவாலயத்துக்கு செல்கிறார்கள். ஆனால் அங்கு அவர்களுக்கு சரியான உபசரிப்பு கொடுக்கப்படவில்லை. அதை விட்டு புறப்படும் போது, எலியா, அந்த தேவாலயத்தின் அங்கத்தினர்கள் அனைவரும் தலைவர்கள் ஆகவேண்டும் என்று ஜெபம் செய்கிறார். இதனால் ஜோஸுவாவின் கோபம் உச்சத்தை அடைகிறது.
6) நிகழ்ச்சி 4: கடைசியாக இவர்கள் ஒரு ஏழை ஜெப ஆலயத்திற்கு செல்கிறார்கள், அவர்கள் இவர்களை நன்றாக உபசரிக்கிறார்கள். அங்கிருந்து இவர்கள் கிளம்பும் போது, எலியா இந்த ஆலயத்திற்கு ஒரே ஒரு நல்ல தலைவர் கொடுக்கப்படவேண்டும் என்று ஜெபம் செய்கிறார். இப்படிப்பட்ட நல்ல ஜெப ஆலயத்திற்கு ஒரு தலைவர் தானா என்றுச் சொல்லி, ஜோஸுவா கோபம் கொண்டு, எலியாவிடம் 'நீங்கள் செய்த அனைத்து செயல்களுக்கும் விளக்கம் தாருங்கள் என்று கேட்டார்'.
7) எலியா நான்கு செயல்களுக்கும் விளக்கம் அளித்தார். அந்த ஏழை தம்பதியர்களில், அந்த மூதாட்டி அன்று மரிக்கவேண்டி இருந்தது, எனவே, எலியா ஜெபம் செய்து, அப்பெண்மணிக்கு பதிலாக அவர்களின் மாடு மரிக்கும்படி ஜெபம் செய்தார், அப்பெண் பிழைத்துவிட்டார்.
8) இரண்டாவதாக, தங்களை உபசரிக்காமல் விரட்டியவருக்கு சொந்தமான சுவரை ஏன் பழுதுபார்த்தார் என்பதை எலியா விளக்கினார். அந்த சுவருக்கு அடியில் பொக்கிஷம் உள்ளது, அதனை அந்த கஞ்சனாகிய மனிதன் பெறக்கூடாது என்பதற்காக அச்சுவர் பழுதுபார்க்கப்பட்டது. எதிர்காலத்தில் அந்த பொக்கிஷம் மற்றவர்களுக்கு கிடைக்கும்.
9) மூன்றாவதாக, அனேக தலைவர்கள் உண்டானால், ஒருவரின் பேச்சை இன்னொருவர் கேட்காமல், அவர்கள் முழுவதுமாக அழிந்துப்போவார்கள். அதே போல, ஒரே ஒரு தலைவன் மட்டும் எழும்பினால், அவனது வழியில் அந்த ஏழை தேவாலயம் நன்றாக செழிக்கும். இது தான் எலியா சொன்ன பதில்.
இதுவரை பார்த்த விவரங்களிலிருந்து அறிவது என்ன? இஸ்லாமுக்கு முன்னால் நிலவிய யூத வட்டார கட்டுக்கதைகளையும், அலேக்சாண்டர் ரொமான்ஸ் புத்தகங்களில் உள்ள கதைகளையும் சிறிது மாற்றி, முஹம்மது குர்-ஆனில் புகுத்தியுள்ளார். இதனை சுலபமாக புரிந்துக்கொள்ள கீழ்கண்ட அட்டவணை உதவிபுரியும்.
குர்-ஆன் மற்றும் யூத கட்டுக்கதை ஒப்பீடு:
விவரம் | குர்-ஆன் (18:60-82) | யூத கட்டுக்கதை |
---|---|---|
ஞானியாக இருப்பவர் | ஹில்று | எலியா |
கற்க வந்தவர் | மோசே (மூஸா) | ஜோஸுவா பென் லேவி |
நிகழ்ச்சி 1 | ஏழைகளின் கப்பலில் ஓட்டை போடப்பட்டது | ஏழை தம்பதியினரின் மாடு சாகடிக்கப்பட்டது |
நிகழ்ச்சி 2 | பையன் கொல்லப்படுகிறான் | உபசரிக்காத செல்வந்தர் – சுவரை சரி செய்தல் |
நிகழ்ச்சி 3 | இவர்களை உபசரிக்காத கிராமம் – சுவரை சரி செய்தல் | செல்வ செழிப்பான் தேவாலயம் |
நிகழ்ச்சி 4 | குர்-ஆனில் 4வது நிகழ்ச்சி இல்லை | ஏழை தேவாலயம் |
குர்-ஆனின் மூன்றாம் நிகழ்ச்சியும், யூதகட்டுக்கதையின் இரண்டாம் நிகழ்ச்சியும் ஒரே மாதிரியானது - பழுதான சுவர் சரி செய்யப்பட்டது.
முடிவுரை:
மேற்கண்ட பட்டியலை கூர்ந்து கவனியுங்கள். குர்-ஆனில் (18:60-82) மூன்று நிகழ்ச்சிகள், யூத கட்டுக்கதைகளில் நான்கு கதைகள் இருக்கின்றன. ஆனால் ஒரே மாதிரியான நிகழ்ச்சி தான். யூத கதைகளை கொஞ்சம் மாற்றி குர்-ஆனில் புகுத்தப்பட்டுள்ளது. குர்-ஆனின் ஒவ்வொரு வார்த்தையும், உலகம் உண்டாவவதற்கு முன்பாக அல்லாஹ்வால் எழுதப்பட்டது என்று முஸ்லிம்கள் சொல்வதை எப்படி நம்பமுடியும்?
அடுத்த கட்டுரையில் பாரா அவர்களின் இதர அத்தியாயங்களில் உள்ள விவரங்களை ஆய்வு செய்வோம். தேவைப்பட்டால் துல்கர்னைன் பற்றிய இதர விவரங்களை தனி கட்டுரைகளாக காண்போம்.
அடிக்குறிப்புக்கள்:
[1] குர்-ஆன் 18:60-82 வசனங்கள்
18:60. இன்னும் மூஸா தம் பணியாளிடம், "இரு கடல்களும் சேரும் இடத்தை அடையும் வரை நீங்காது நடப்பேன்; அல்லது வருடக் கணக்கில் நான் போய்க்கொண்டிருப்பேன்" என்று கூறியதை நீர் நினைவு படுத்துவீராக.
18:61. அவர்கள் இருவரும் அவ்விரணடு (கடல்களு)க்கும் இடையே ஒன்று சேரும் இடத்தை அடைந்த போது; அவ்விருவருடைய மீனை அவ்விருவரும் மறந்து விட்டனர்; அது கடலில் தன்னுடைய வழியைச் சுரங்கம் போல் அமைத்துக்கொண்டு (நீந்திப் போய்) விட்டது.
18:62. அவ்விருவரும், அப்புறம் அந்த இடத்தைக் கடந்த போது, தம் பணியாளை நோக்கி, "நம்முடைய காலை ஆகாரத்தைக் கொண்டுவா; இந்த நம் பிரயாணத்தில் நிச்சயமாக நாம் களைப்பைச் சந்திக்கிறோம்" என்று (மூஸா) கூறினார்.
18:63. அதற்கு "அக்கற்பாறையில் நாம் தங்கிய சமயத்தில் நீங்கள் பார்த்தீர்களா? நிச்சயமாக நான் மீனை மறந்து விட்டேன்." மேலும், அதை (உங்களிடம்) சொல்வதை ஷைத்தானையன்றி (வேறு எவனும்) என்னை மறக்கடிக்கவில்லை; மேலும் அது கடலுக்குள் தன் வழியை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது!" என்று பணியாள் கூறினார்.
18:64. (அப்போது) மூஸா, "நாம் தேடிவந்த (இடம் அ)துதான்" என்று கூறி, இருவரும் தம் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி (வந்தவழியே) திரும்பிச் சென்றார்கள்.
18:65. (இவ்வாறு) அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள்; நாம் அவருக்கு நம்மிடமிருந்து கிருபை அருளியிருந்தோம்; இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து கல்வி ஞானத்தையும் கற்றுக் கொடுத்திருந்தோம்.
18:66. "உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நன்மையானவற்றை நீங்கள் எனக்குக் கற்பிக்கும் பொருட்டு, உங்களை நான் பின் தொடரட்டுமா? என்று அவரிடம் மூஸா கேட்டார்.
18:67. (அதற்கவர்,) "நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலமாட்டீர்!" என்று கூறினார்.
18:68. "(ஏனெனில்) எதைப் பற்றி உமக்கு முழுமையான ஞானம் இல்லையோ, அதில் நீர் எவ்வாறு பொறுமையாயிருப்பீர்!" (என்று கேட்டார்.)
18:69. (அதற்கு) மூஸா, "இன்ஷா அல்லாஹ்! நான் பொறுமையுள்ளவனாகவும், எவ்விஷயத்திலும் உமக்கு மாறு செய்யாதவனாகவும் நான் இருப்பதை நீங்கள் விரைவில் காண்பீர்கள்" என்று (மூஸா) சொன்னார்.
18:70. (அதற்கு அவர்) "நீர் என்னைப்பின் தொடர்வதாயின், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் - நானாகவே அதைப்பற்றி உமக்கு அறிவிக்கும் வரை - நீர் என்னிடம் கேட்கக் கூடாது" என்று சொன்னார்.
18:71. பின்னர் இருவரும் ஒரு மரக்கலத்தில் ஏறும் வரையில் நடந்து சென்றனர், (மரக்கலம் கடலில் செல்லலானதும்;) அவர் அதில் ஓர் ஓட்டையைப் போட்டார்; "இதிலுள்ளவர்களை மூழ்கடிக்கவா நீங்கள் இதில் ஓர் ஓட்டையைப் போட்டீர்கள்? நிச்சயமாக நீங்கள் ஓர் (அபாயகரமான) பெருங் காரியத்தைச் செய்துவிட்டீர்கள்" என்று (மூஸா) கூறினார்.
18:72. (அதற்கு அவர்,) "நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையைக் கடைப்பிடிக்க முடியாது என்று உமக்கு நான் சொல்லவில்லையா? என்றார்.
18:73. "நான் மறந்து விட்டதைப் பற்றி நீங்கள் என்னை(க் குற்றம்) பிடிக்க வேண்டாம்; இன்னும் என் காரியத்தைச் சிரமமுடையதாக ஆக்கி விடாதீர்கள்" என்று (மூஸா) கூறினார்.
18:74. பின்னர் (மரக்கலத்திலிருந்து இறங்கி) இருவரும் வழி நடக்கலானார்கள்; (வழியில்) ஒரு பையனை அவ்விருவரும் சந்தித்த போது, அவர் அவனைக் கொன்று விட்டார். (உடனே மூஸா) "கொலைக்குற்றமின்றி, பரிசுத்தமான ஜீவனைக் கொன்றுவிட்டீர்களே? நிச்சயமாக நீங்கள் பெருத்தக் கேடான ஒருகாரியத்தையே செய்து விட்டீர்கள்!" என்று (மூஸா) கூறினார்.
18:75. (அதற்கு அவர்) "நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலாது என்று உமக்கு நாம் சொல்லவில்லையா?" என்று கூறினார்.
18:76. இதன் பின்னர் நான் எந்த விஷயத்தைப் பற்றியாவது உங்களிடம் கேட்பேனாயின் நீங்கள் உங்கள் தோழனாக வைத்துக் கொள்ள வேண்டாம் - நிச்சயமாக நீங்கள் என்னிடமிருந்து தக்க மன்னிப்புக் கோருதலைப் பெற்றுக் கொண்டீர்கள்" என்று கூறினார்.
18:77. பின்னர் அவ்விருவரும் வழி நடந்து, இருவரும் ஒரு கிராமத்தாரிடம் வந்து சேர்ந்தார்கள்; தங்களிருவருக்கும் உணவு தருமாறு அந்த கிராமத்தாரிடம் கேட்டார்கள்; ஆனால் அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டார்கள்; அப்போது அங்கே இடிந்து அடியோடு விழும் நிலையிலிருந்த ஒரு சுவரை அவ்விருவரும் கண்டனர்; ஆகவே, அவர் (சரிசெய்து) நிமிர்த்து வைத்தார். (இதைக் கண்ட மூஸா) "நீங்கள் நாடியிருந்தால் இதற்கென ஒரு கூலியை பெற்றிருக்கலாமே" என்று (மூஸா) கூறினார்.
18:78. "இது தான் எனக்கும், உமக்குமிடையே பிரிவு(க்குரிய நேரம்) ஆகும்; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ, அதன் விளக்கத்தையும் (இப்பொழுதே) உமக்குத் திட்டமாக அறிவித்து விடுகிறேன்" என்று அவர் கூறினார்.
18:79. "அம்மரக்கலம் கடலில் வேலை செய்யும் ஏழைகள் சிலருக்குச் சொந்தமானது; எனவே நான் அதை (ஓட்டையிட்டு)ப் பழுதாக்க விரும்பினேன்; (ஏனெனில்) அவர்களுக்குப் பின்னால் (கொடுங்கோலனான) ஓர் அரசன் இருந்தான்; அவன் (பழுதில்லா) மரக்கலங்களையெல்லாம் பலவந்தமாக எடுத்துக் கொள்கிறான்.
18:80. "(அடுத்து) அந்த சிறுவனுடைய தாய், தந்தையர் இருவரும் முஃமின்களாக இருக்கிறார்கள்; அவன் (வாலிபனாகி) அவ்விருவரையும் வழிகேட்டிலும், குஃப்ரிலும் சேர்த்து விடுவான் என்று நாம் பயந்தோம்.
18:81. "இன்னும், அவ்விருவருக்கும், பரிசுத்தத்திலும் (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறந்திருக்க கூடிய (ஒரு மகனை) அவ்விருவருடைய இறைவன் (கொலையுண்டவனுக்குப்) பதிலாக கொடுப்பதை நாம் விரும்பினோம்.
18:82. "இனி: (நான் நிமிர்த்து வைத்த) அந்த சுவர் அந்தப் பட்டிணத்திலுள்ள அநாதைச் சிறுவர் இருவருக்குரியது; அதன் அடியில் அவ்விருவருக்கும் சொந்தமான புதையல் உள்ளது; அவ்விருவருடைய தந்தை (ஸாலிஹான) நல்ல மனிதராக இருந்தார்; எனவே, அவ்விருவரும் தக்க பிராயமடைந்த தம்மிருவரின் புதையலையும் வெளிப்படுத்தி (எடுத்துக்) கொள்ள வேண்டும் என உம்முடைய இறைவன் நாடினான். (இவையெல்லாம்) உம் இறைவனுடைய ரஹ்மத்தில் நின்றும் உள்ளவை; என் விருப்பு, வெறுப்பின்படி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அதன் விளக்கம் இது தான்" என்று கூறினார். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)
2016-2017 ரமளான் தொடர் கட்டுரைகள்
ரமளான் தொடர் கட்டுரைகள் (2012 - 2017)
உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்
Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2016ramalan/2017ramalan21.html
No comments:
Post a Comment