[28] நிலமெல்லாம் இரத்தம் – பாராவை ரணப்படுத்திய ரஹீக்

முன்னுரை:

பாரா அவர்களின் நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தின் 20வது அத்தியாயத்திற்கு கொடுத்த முந்தைய பதில்கள்:

குர்-ஆனையும், ஹதீஸ்களையும் படிக்காமல் இஸ்லாம் பற்றி பாரா அவர்கள் எழுதிய விவரங்களை நாம் ஆய்வு செய்துக்கொண்டு இருக்கிறோம். அவர் எழுதியவைகள் குர்-ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் முரண்படுகிறது என்பதை முந்தைய கட்டுரைகளில் கண்டோம். அவரது நிலமெல்லாம் இரத்தம் தொடருக்காக உதவியதாக ஒரு சரித்திர நூலை தம்முடைய "உதவிய நூல்களின்" பட்டியலில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஒரு புத்தகத்தையாவது உருப்படியாக அவர் படித்திருந்தால், 20வது அத்தியாயத்தை எழுதியிருந்திருக்கமாட்டார். இதை நான் அவருக்கு ஒரு சவாலாகவே முன் வைக்கிறேன்.

குர்-ஆனை படிக்காமல் எழுதினார், மன்னித்துவிடலாம், ஏனென்றால் அவருக்கு அது புரியாது. ஹதீஸ்களையும் படிக்காமல் எழுதினார், அதையும் மன்னிக்கலாம், ஏனென்றால் அது ஒரு கோர்வையாக இல்லை மேலும் பல தொகுப்புக்களாகவும் பல ஆயிர பக்கங்கள் கொண்டதாகவும் உள்ளது. ஆனால், தமிழ் மொழியில் முஹம்மதுவின் சரித்திரத்தை கோர்வையாக பதிவு செய்த புத்தகத்தை படித்ததாக அவர் பட்டியலில் சேர்த்துள்ளார். இந்த புத்தகத்துக்கு எதிராக அவர் எழுதியதை எப்படி மன்னிப்பது? வரம் கொடுத்தவனின் தலையில் கைவைத்த கதையாக அல்லவா இருக்கிறது ரஹீக் புத்தகத்துக்கு பாரா  கொடுத்த அல்வா!

1) ரஹீக் புத்தகம் – எட்டாவது இடம்

பாரா அவர்கள் தம்முடைய நிலமெல்லாம் இரத்தம் தொடரை முடித்த போது, அவருடைய ஆய்வுக்கு உதவிய நூல்கள் என்று ஒரு பட்டியலை கொடுத்துள்ளார். அந்த பட்டியலில் தமிழ் குர்-ஆனோ, ஹதீஸ்களோ இல்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் ஒரு புத்தகத்தின் பெயரை கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

பாரா அவர்கள் எழுதியது:

8. ரஹீக், ஸஃபிய்யுர் ரஹ்மான் (மொழிபெயர்ப்பு: ஏ. ஓமர் ஷெரீஃப், தாருல் ஹுதா, சென்னை 1 வெளியீடு.)

இப்புத்தகத்தின் சிறப்பு என்ன? 

முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு ஹதீஸ்களில் முழுவதுமாக இல்லை. குர்-ஆனில் முஹம்மதுவின் வரலாறு 1% கூட இல்லை என்றுச் சொல்லலாம். ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்கள் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்றை ஒரு கோர்வையாக எழுதினார்கள், அதில் முக்கியமானவர் இப்னு இஷாக் என்பவர் ஆவார். இவர் எழுதிய கையெழுத்துப் பிரதிகள் இப்போது நம்மிடம் இல்லை, ஆனால், இவரைத் தொடர்ந்து இப்னு இஷாம், மற்றும் தபரி போன்றவர்கள், இவருடைய புத்தகத்திலிருந்து முழுவதுமாக மேற்கோள் காட்டியுள்ளார்கள். அதாவது, அழிந்துவிட்ட இப்னு இஷாக்கின் சரித்திரம் முழுவதும் இவ்விருவரின் புத்தகங்களில் கிடைத்துவிடும். தமிழ் முஸ்லிம்களின் துரதிர்ஷ்டம் என்னவென்றால், இந்த சரித்திரங்கள் அனைத்தும் இதுவரை தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை என்பதாகும் [ஆங்கிலத்தில் உண்டு]. இப்னு இஷாக்கின் "ஸீரத் ரஸூலல்லாஹ்" புத்தகத்தை தமிழில் மொழிப்பெயர்க்கலாம் என்று கிறிஸ்தவ நண்பர்கள் 2010ம் ஆண்டுக்கு முன்பு பேசிக்கொண்டார்கள், அதற்கான நேரத்திற்காக காத்துக்கொண்டு இருந்தார்கள். ஆனால், எங்களுக்கு அடித்தது ஜாக்பாட். 

"அர்ரஹீக்குல்  மக்தூம்" அல்லது ரஹீக் என்ற பெயரில் ஒரு புத்தகம் தமிழில் முஸ்லிம்களால் மொழியாக்கம் செய்யப்பட்டது. இதில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு முஹம்மதுவின் சரித்திரம் ஒரு கோர்வையாக எழுதப்பட்டுள்ளது. 

இப்புத்தகத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. "உலக இஸ்லாமிய லீக்" என்ற இயக்கம் மக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.  1976ம் ஆண்டு, முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்றை இஸ்லாமிய சரித்திரத்தின் அடிப்படையில் சிறப்பாக எழுதுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் (மொத்தம் 1,50,000 சௌதி ரியால்கள்) என்று அறிவித்தது. உலகமனைத்திலும் இருந்து 1182 ஆய்வுகள் பல மொழிகளில் பல இஸ்லாமிய அறிஞர்கள் எழுதி அனுப்பினார்கள். அதில் கடைசியாக 183 ஆய்வுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, முடிவாக 5 ஆய்வுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் முதல் பரிசை தட்டிச்சென்றது இந்த "ரஹீக்" என்ற புத்தகம். இதனை தமிழிலும் மொழியாக்கம் செய்து வெளியிட்டார்கள். முஹம்மதுவைப் பற்றிய விவரங்களை கோர்வையாக படிக்க இந்த புத்தகம் பேருதவியாக உள்ளது. 

இப்புத்தகத்தின் இதர விவரங்களை அறியவும், PDFல் மற்றும் ஆடியோவில் பதிவிறக்கம் செய்யவும் இந்த தொடுப்பிற்குச் செல்லவும்: இஸ்லாம் கல்வி 

இணையத்தில் படிக்க இங்கு சொடுக்கவும்: தமிழில் குர்-ஆன் - முஹம்மதுவின் வரலாறு

ஆக, பாகிஸ்தானும், சௌதியும் (உலக முஸ்லிம் தலைவர்கள்) ஒன்றாக சேர்ந்து ஆய்வு செய்து, இது தான் உண்மையான ஆதார பூர்வமான முஹம்மதுவின் சரித்திரம் என்று பாராட்டி, பரிசுகள் வழங்கிய புத்தகம் தான் ரஹீக் (அர்ரஹீக்குல் மக்தூம் என்றால், முத்திரையிடப்பட்ட உயர்ந்த மதுபானம் என்று பொருள்). இதன் இன்னொரு சிறப்பு, இப்புத்தகத்தின் ஆசிரியர் ஒரு இந்தியர் (உத்திர பிரதேசம்) என்பதாகும்.

பாரா தம்முடைய நிலமெல்லாம் புத்தகத்திற்காக ரஹீக்கை படித்தாரா?

ஹதீஸ்களை படிக்காதவர், தமிழ் குர்-ஆனை படிக்காதவர் இதனை படித்துள்ளார், இதற்கு ஆதாரம், தம்முடைய 'உதவிய நூல்களின் பட்டியலில் இதனை எட்டாவதாக குறிப்பிட்டுள்ளார்' என்பதிலிருந்து அறிந்துக்கொள்ளலாம்.

2) "ரஹீக்" புத்தகமும், நிலமெல்லாம் புத்தகத்தின் 20வது அத்தியாயமும்

பாரா அவர்களின் 20வது அத்தியாயத்தை முஸ்லிம்கள் படித்தால், கண்களில் கண்ணீர் ஓடும், இஸ்லாம் மீது ஒரு பற்று வரும், இல்லை இல்லை "பற்று பற்றி எறியும்". பாரா மேற்கத்திய ஆய்வாளர்கள் பொய்யர்கள் என்றார், அவர்கள் இஸ்லாம் மீது அவதூறு கூறுகிறார்கள் என்றார். முஸ்லிம்களாலேயே செய்யமுடியாத ஒரு அருமையான சேவையை பாரா இஸ்லாமுக்கு புரிந்துள்ளார். அது என்னவென்றால், முஹம்மது உயிரோடு இருந்த போது செய்த யுத்தங்கள் "வெறும் மூன்று" தான் என்று அடித்துச் சொல்கிறார். இது தான் உண்மை சரித்திரம் என்கிறார். யாராவது நான்கு அல்லது மூன்றைவிட அதிகம் என்றுச் சொன்னால், அவர்கள் யூதர்கள் என்று பட்டம் சூட்டுகின்றார், அதாவது இஸ்லாமின் படி மிகவும் இழிவான பிறவிகள்.

நம்முடைய கையில் இப்போது ரஹீக் புத்தகம் உள்ளது, அதே புத்தகத்தை பாராவும் படித்துள்ளார் என்று அறிந்த போது பரவசமடைந்தேன்.

இப்போது நாம் சுருக்கமாக, ரஹீக் புத்தகத்தில்:

  • முஹம்மது எத்தனை போர்களை கட்டளையிட்டார்? 
  • அவர் எத்தனை போர்களில் பங்கு பெற்றார்
  • எத்தனை போர்களின் பெயர்களை இப்புத்தகம் முன்மொழிகிறது

என்பதை மட்டுமே காண்போம். 

போர்களின் பின்னணியோ, இதர விவரங்களோ நமக்கு தேவையில்லை, நமக்கு தேவை வெறும் எண்ணிக்கையும் அவைகளின் பெயர்களும் மட்டுமே. அப்புத்தகத்தின் தொடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது, வாசகர்கள் அதனை பதிவிறக்கம் செய்துக்கொண்டு படித்துக்கொள்ளலாம் அல்லது ஒவ்வொரு போரின் பெயரோடு கூட அதன் தொடுப்பையும் கொடுத்துள்ளேன், அதனை சொடுக்கி அந்த போர் பற்றி, ரஹீக் சரித்திரம் என்ன சொல்கிறது என்பதை வாசகர்கள் முஸ்லிம் தளங்களிலேயே படித்துக்கொள்ளலாம். இதில் எதனையும் நான் மறைக்கவில்லை.

பாரா ரஹீக் புத்தகத்தை படித்து தம்முடைய புத்தகத்தை எழுதியதால், வெறும் மூன்று போர்கள் மட்டுமே ரஹீக்கில் நாம் காண்போம் என்று நம்பி நம் ஆய்வை (தேடலை) தொடருவோம்.

3) ரஹீக்கின்படி போர்கள்/திடீர் தாக்குதல்கள்/வழிப்பறி கொள்ளைகள் எத்தனை?

"போர்" மற்றும் "படைப்பிரிவு" – வித்தியாசம் என்ன?

முஹம்மது பங்கு பெற்ற யுத்தங்களை "போர்" என்றும், தாம் போகாமல், மற்றவர்களை அனுப்பிய யுத்தங்களை (வழிப்பறி கொள்ளைகள், திடீர் தாக்குதல்கள், யுத்தங்களை) "படைப்பிரிவு" என்று குறிப்பிடுவதாக இப்புத்தகத்தின் ஆசிரியர் குறிப்பிடுகிறார். 

ரஹீக், பக்கம் 211

(நபி (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட போருக்கு அரபியில் 'கஸ்வா' என்றும் அவர்கள் கலந்து கொள்ளாமல் தோழர்கள் மட்டும் சென்று வந்த போர்களுக்கு 'ஸய்யா' என்றும் கூறப்படும். நாம் இந்த தமிழாக்கத்தில் கஸ்வாவை 'போர்' என்றும் ஸய்யாவை 'படைப் பிரிவு' என்றும் குறிப்பிடுகிறோம்.) மூலம்

ரஹீக் புத்தகத்தின் பொருளடக்கம்:

ரஹீக் புத்தகத்திற்கு உள்ளே சென்று எத்தனை போர்கள் என்று கணக்கெடுக்கவேண்டிய அவசியமில்லை. இந்த தளத்தில் (http://www.tamililquran.com/mohamed_main.asp) ரஹீக் புத்தகத்தின் பொருளடக்கம் அழகாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பொருளடக்கத்தில் வரும் போர்களின், படைப்பிரிவுகளின் எண்ணிக்கையை நாம் எடுத்தால் போதுமானது. இந்த எண்ணிக்கை மூன்றை தாண்டாது என்று யாராவது நினைத்தால், அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.

அடுத்து வரும் பட்டியலில் கொடுக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும், தலைப்புக்களோடு கூட ரஹீக் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும். இப்படிப்பட்ட [அடைப்பிற்குள் உள்ளவை என் வரிகள்].

1) ஆயுதமேந்தித் தாக்குதல் - இக்காலத்தில் நபியவர்கள் நிகழ்த்திய போர்களும் அனுப்பிய படைப் பிரிவுகளும்

எண்தலைப்பு
1'ஸய்ஃபுல் பஹர்'
2'ராபிக்'
3'கர்ரார்'
4 'அப்வா' ('வத்தான்'
5 'பூவாத்"
6'ஸஃப்வான்"
7'துல் உஷைரா"
8'நக்லா"

[மேற்கண்ட போர்கள், படைப்பிரிவுகள் பற்றி அறிந்துக்கொள்ள தொடுப்புக்களை சொடுக்கி படிக்கலாம். இவைகளை போர்கள் என்றுச் சொல்வதை விட "வழிப்பறி கொள்ளைகள்" என்று சொல்லவேண்டும். வியாபார கூட்டத்தை வழி மறைத்து, பொருட்களை திருடுவதை என்னவென்றுச் சொல்வது?]

பாரா கணக்கு 3, ரஹீக் கணக்கு: 8

2) பெரிய பத்ர் போர் - பாரா கணக்கு 3, ரஹீக் கணக்கு: 9

3) பத்ர் மற்றும் உஹுத் போர்களுக்கு மத்தியில் நிகழ்ந்த ராணுவ நடவடிக்கைகள்

எண்தலைப்பு

10

ஸுலைம் குலத்தவருடன் போர்

11

கைனுகா கிளையினருடன் போர்

12

'ஸவீக்' போர்

13

தீ அம்ர் போர்

14

'பஹ்ரான்' போர்

15

ஜைதுப்னு ஹாஸாம் படைப் பிரிவு

பாரா கணக்கு 3, ரஹீக் கணக்கு: 15

4) உஹுத் போர்

எண்தலைப்பு

17

அபூ ஸலமா படைப் பிரிவு (ஹிஜ்ரி 4, முஹர்ரம்)

18

நழீர் இனத்தவருடன் போர் (ஹிஜ்ரி 4 ரபீஉல் அவ்வல்கி.பி. 625ஆகஸ்டு)

19

"நஜ்து" போர் (ஹிஜ் 4, ரபீவுல் ஆகிர் (ஜுமாதா அல்ஊலா)

20

இரண்டாம் பத்ர் போர் (ஹிஜ் 4, ஷஃபான் மாதம்கி.பி. 626,ஜனவரி)

21

தூமத்துல் ஜன்தல் போர் (ஹிஜ் 5, ரபீஉல் அவ்வல் 25)

பாரா கணக்கு 3, ரஹீக் கணக்கு: 21

6) அல்அஹ்ஜாப் போர் - பாரா கணக்கு 3, ரஹீக் கணக்கு: 22

7) பனூ குரைளா போர் - பாரா கணக்கு 3, ரஹீக் கணக்கு: 23

8) அடுத்தகட்ட ராணுவ நடவடிக்கை

எண்தலைப்பு

24

முஹம்மது இப்னு மஸ்லமா படைப் பிரிவு (ஹிஜ் 6, முஹர்ரம் 10)

25

லஹ்யான் போர் (ஹிஜ் 6, ரபீவுல் அவ்வல்)

26

குழுக்களையும் படைப்பிரிவுகளையும் தொடர்ந்து அனுப்புதல்

பாரா கணக்கு 3, ரஹீக் கணக்கு: 31

11) ஹுதைபிய்யா ஒப்பந்தத்திற்குப் பின் நிகழ்ந்த போர் நடவடிக்கைகள் - தூகரத் (அ) காபா போர் - பாரா கணக்கு 3, ரஹீக் கணக்கு: 32

12) கைபர் போர் (ஹிஜ்ரி 7, முஹர்ரம்) - பாரா கணக்கு 3, ரஹீக் கணக்கு: 33

13) அடுத்தக்கட்ட போர்களும் படைப் பிரிவுகளும் (ஹிஜ்ரி 7)

எண்தலைப்பு

34

காலிப் இப்னு அப்துல்லாஹ் படைப் பிரிவு

35

ஹிஸ்மா படைப் பிரிவு

36

உமர் இப்னு கத்தாப் படைப் பிரிவு

37

பஷீர் இப்னு ஸஅது படைப் பிரிவு

38

காலிபு இப்னு அப்துல்லாஹ் படைப் பிரிவு

39

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா படைப் பிரிவு

40

பஷீர் இப்னு ஸஅத் படைப் பிரிவு

41

அபூ ஹத்ரத் படைப் பிரிவு

பாரா கணக்கு 3, ரஹீக் கணக்கு: 41

14) உம்ராவை நிறைவேற்றப் புறப்படுதல் (உம்ரத்துல் கழா)

எண்தலைப்பு

42

கஅபு இப்னு உமைர் அன்சாரி படைப் பிரிவு

43

ஷுஜா இப்னு வஹபு அல்அசதி படைப் பிரிவு

பாரா கணக்கு 3, ரஹீக் கணக்கு: 43

15) முஃதா யுத்தம்

எண்தலைப்பு

44

முஃதா யுத்தம்

45

தாதுஸ்ஸலாசில் படைப் பிரிவு

46

அபூகதாதா படைப் பிரிவு

பாரா கணக்கு 3, ரஹீக் கணக்கு: 46

16) மக்காவை வெற்றி கொள்வது - பாரா கணக்கு 3, ரஹீக் கணக்கு: 47

17) ஹுனைன் யுத்தம் - பாரா கணக்கு 3, ரஹீக் கணக்கு: 48

18) மக்கா வெற்றிக்குப் பின் அனுப்பப்பட்ட படைப் பிரிவுகளும் குழுக்களும்

எண்தலைப்பு
49உயைனா இப்னு ஹிஸ்ன் படைப் பிரிவு
50குத்பா இப்னு ஆமிர் படைப் பிரிவு

பாரா கணக்கு 3, ரஹீக் கணக்கு: 50

19) தபூக் போர் (ஹிஜ்ரி 9, ரஜப்) - பாரா கணக்கு 3, ரஹீக் கணக்கு: 51

20) இறுதிப் படை - பாரா கணக்கு 3, ரஹீக் கணக்கு: 52

இந்த கணக்கு வெறும் ரஹீக் புத்தகத்தின் பொருளடக்கத்திலிருந்து எடுத்தது, முஹம்மது புரிந்த போர்கள் மற்றும் அவர் கட்டளையிட்ட போர்களின் (படை பிரிவுகள்) எண்ணிக்கையை இங்கு கொடுத்தேன். தனிப்பட்ட  மனிதர்களை கொள்ளும்படி முஹம்மது கட்டளையிட்ட நிகழ்ச்சிகளை ரஹீக் பதிவு செய்துள்ளது, அவைகளை இங்கு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதை வாசகர்கள் கவனிக்கவும். இங்கு குறிப்பிட்ட படைப்பிரிவுகள் என்பது எப்போதும் பல ஆயிர இராணுவ வீரர்களை அனுப்பி செய்த யுத்தம் என்று எண்ணக்கூடாது, குறைந்த எண்ணிக்கையுள்ள இராணுவத்தையும் அனுப்பிய சம்பவங்களும் உண்டு.

4) பாராவிற்கு கணக்கு போட தெரியுமா?

முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தில் முதல் பரிசு பெற்ற புத்தகம், "முஹம்மது செய்தது குறைந்தபட்சம் 50 போர்கள் என்று சொல்கிறது". பாராவோ, வெறும் மூன்று என்றுச் சொல்கிறார்.

மூன்று எங்கே? ஐம்பத்து இரண்டு எங்கே?

யார் சொல்வது உண்மை? பாராவா? ரஹீக் புத்தகமா?

பாராவிற்கு எங்கே தவறு நடந்துள்ளது என்று இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். இதற்கு மேலும் ஆதாரங்களை காட்டினால், பாரா தாங்கமாட்டார்.

முடிவுரை:

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் இல்லையாம்? ஏனென்றால், வெறும் மூன்று யுத்தங்களை மட்டுமே முஹம்மது புரிந்தாராம், அதுவும் தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளில் முஹம்மது இப்போர்களைச் செய்தாராம்.

ஆனால், ரஹீக் புத்தகம் பாராவின் முகத்தில் கரியை பூசிவிட்டது. பாரா எழுதியது, குர்-ஆனுக்கு முரண்படுகிறது, ஹதீஸ்களுக்கு முரண்படுகிறது, இஸ்லாமிய சரித்திரத்திற்கு முரண்படுகிறது. நிலமெல்லாம் இரத்தத்தின் ஆய்வு கடந்த கால இஸ்லாமிய சரித்திரத்தை இந்த இலட்சனத்தில் விளக்கியுள்ளது.

ஒருவேளை, ரஹீக் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் ஒரு யூதன் என்று பாரா குற்றம்சாட்டினாலும் ஆச்சரியப்படுதவற்கு ஒன்றுமில்லை. ஆனால், இவ்வாசிரியருக்கு முதல் பரிசை எப்படி பாகிஸ்தானும், சௌதி அரேபியாவும் ( இஸ்லாமிய அறிஞர்களைச் சொல்கிறேன்) கொடுத்தது? ஒருவேளை இவர்களும் யூதர்களின் கைக்கூலிகளாக இருப்பார்களோ! அப்படியானால், இந்த ரஹீக் புத்தகத்தை தங்கள் தளங்களில் பதித்துள்ள தமிழ் முஸ்லிம்கள் யார்? யூதர்களா? ஐயகோ! முஸ்லிம்களுக்குத் தான் யூதன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று எண்ணியிருந்தேன், இப்போது பாராவும் இந்த "யூதோபோபியா"வின் அங்கத்தினராக மாறிவிட்டாரே! என்ன செய்வது?

அடுத்த கட்டுரையில், பாராவின் 20வது அத்தியாயத்திலிருக்கும் ஒவ்வொரு பாராவிற்கும் பதில்களைக் காணலாம்.

இதன் பிறகு நிலமெல்லாம் இரத்தத்தின் 21வது அத்தியாயத்திற்கு குதிக்கவேண்டும்…


2016-2017 ரமளான் தொடர் கட்டுரைகள்

ரமளான் தொடர் கட்டுரைகள் (2012 - 2017)

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2016ramalan/2017ramalan28.html


No comments:

Post a Comment

நிலமெல்லாம் இரத்தம் - ஓர் விமர்சனம்

திரு. பா. ராகவன் அவர்களின் "நிலமெல்லாம் இரத்தம்" புத்தகத்திற்கு பதில்கள் நிலமெல்லம் இரத்தம் - விமர்சனம் PDF  (7 MB) [1...